ஆட்டத்தை ஆரம்பித்த அமிட்ஷா மம்தா கூடாரம் காலி பாஜக கோட்டையாக மாறுகிறதா மேற்குவங்கம்?

கொல்கத்தா

திரிணமூல் காங்கிரஸ் கட்சி கொல்கத்தாவில் மிக பெரிய சரிவினை கண்டுள்ளது, ஆளும் கட்சியின் MLA, MP – கள் உட்பட மொத்தம் 100 – க்கும் மேற்பட்ட திரிணமூல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அமிட்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

தற்போதைய MLA கள் 5 பேர் மற்றும் MP – 6 பேர் பாஜகவில் இணைந்தது மம்தாவிற்கு தூக்கத்தை தொலைத்துள்ளது அதுவும் தனது கோட்டையாக கருதிய மேற்கு வங்கத்தில் பாஜக இந்த அளவு விஸ்வரூபம் எடுக்கும் என்று கனவிலும் மம்தா நினைத்திருக்க மாட்டார்.

தற்போது மம்தா தூக்கத்தை தொலைத்து நிதானம் இன்றி இருப்பதாக வங்க நாளேடுகள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். கடந்த முறை தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழக்காதது, கட்சிக்கு தொடர்பில்லாத நடிகைகளுக்கு உடனே சீட் வழங்கியது ஆகிவற்றை எதிர்த்து அவர்கள் திரிணாமூல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

இதையும் படிக்க:  இரும்பு பெண்மணியாக வலம்வந்த மம்தா தனது கட்சி தொண்டர்களால் மேடையிலேயே விரட்டப்பட்டதற்கான காரணங்கள் இவைதான்.

மேலும் கூச்பெஹர், பஷிரசத், ஜார்கிரம், மெதினிபூர், போல்புர், பிஷ்னுபுர், கிருஷ்ணா நகர் ஆகிய தொகுதிகளில் இப்போது இருக்கும் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பொறுமை காத்த பாஜக, இப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களை ஏற்று கொண்டு , அவர்களுக்கு சீட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் வலுவான போட்டியை அளிக்க முடியும் என்று அமிட்ஷா கணக்கிட்டுள்ளார் .

மேலும் பாஜக தலைவர் அமிட்ஷா மற்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மேற்கு வங்கம் வந்தபோது அவர்களை தரையிறங்கவிடாமல் மம்தா தடுத்தார், இதனால் அன்றே அமிட்ஷா மம்தாவை எச்சரித்தார் இன்று தனது ஆட்டத்தை ஆரம்பித்து மம்தாவின் கூடாரத்தை காலி செய்துவிட்டார்.

இதையும் படிக்க:  நாடாளுமன்றம் செல்கிறார் கண்ணப்பன் எதிர்க்கட்சிகள் கிளப்பிய புரளிகளுக்கு முற்றுப்புள்ளி மகிழ்ச்சியில் சமுதாயத்தினர்.?

அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர்களை வைத்தே அந்தக் கட்சிக்கு எதிராக பணியாற்றி தோற்கடிக்க முடியும் என்று அமிட்ஷா மம்தாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

©TNNEWS24

Loading...