இந்தியாவில் முதல்முறை நான் சிங்கிள் என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள் முதல்வரிடம் மனுகொடுத்த நபரால் பரபரப்பு.

மகாராஷ்டிரா.,

மகாராஷ்டிரா மாநிலம் புனே வை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் தனக்கு 35 வயது ஆகிவிட்டதாகவும் தனக்கு பிடித்த வேலையும் கிடைக்காமல் ஏதோ கிடைத்த வேலையை செய்து வருவதாகவும்,

மேலும் தனக்கு திருமணம் ஆகாமல் தான் சிங்கள் லாகவே இருப்பதாகவும் அதனால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதியளிக்குமாறும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்,

மேலும் தனது தாய் தந்தைக்கு கூட தன்னால் எதுவும் செய்யமுடிய வில்லை என்றும் அவர் உருக்கத்துடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் , மேலும் பிடித்த வேலையும் இல்லாமல் , ஒரு வாழ்க்கை துணையும் இல்லாமல் வாழ்வதற்கு சாவதே மேல் அதனால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதியளியுங்கள் என்று கேட்டிருந்தார்.

இதையும் படிக்க:  பாகிஸ்தானுடன் போர் தொடுக்க போகிறதா இந்தியா? இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்த வெளியுறவு துறை அமைச்சர்

இதுபற்றி கூறிய மகாராஷ்டிரா காவல் துறையினர் அவரின் தந்தைக்கு 83 வயது தாய்க்கு 77 வயது அவர் நன்கு படித்து பல பட்டங்கள் பெற்ற ஒரு பட்டதாரி.

அவருக்கு தனது பெற்றோருக்கு தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற விரக்தியிலும் , தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற விரத்தியிலும் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கிவருவதாகவும் கூறினார்.

பலரும் இந்த செய்தியை இணையத்தில் பகிர்ந்து தங்களது வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

இதையும் படிக்க:  வல்லரசுகளுக்கு இணையாக சாதித்து காட்டியது இந்தியா காங்கிரஸ் அரசால் முடியாததை நிகழ்த்திய பாஜக.