வன்னியர்கள் முன்னேறியதே எங்களால் தான்.. அந்த நன்றிகூட இல்லையா – ஸ்டாலின் சர்ச்சை

வன்னியர்கள் முன்னேறியதே எங்களால் தான்.. அந்த நன்றிகூட இல்லையா ஸ்டாலின் சர்ச்சை

தருமபுரி

தி.மு.க தலைவர், மு.க.ஸ்டாலின் தருமபுரி மக்களவை தொகுதி, திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து அரூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேலம்-சென்னை நெடுஞ்சாலை திட்டத்தை இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய அளவிற்கு மெகா கூட்டணி வைத்துள்ளோம் என பழனிசாமி பேசியிருக்கிறார் . சாக்கடையில் நாற்றம் வந்தால் கூடத்தான் திரும்பி பார்ப்பார்கள். நீங்கள் சாக்கடை போன்றவர்கள் என்று சர்ச்சையாக பேசினார்.

சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி சாலை போடக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி, போராட்டம் நடத்தியது, தற்போது அதைமறந்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டுள்ளது.

கூட்டணி சேரும் போது பாமக 10 அம்ச கோரிக்கை ஒன்றை வைத்தது.அதில் சேலம்-சென்னை நெடுஞ்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஏன் குறிப்பிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.  

இதையும் படிக்க:  களம் காண்கிறார் செளமியா அன்புமணி எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க பாமக ரெடி !

பா.ம.க-வால், மக்கள் நலன் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தனி ஒருவர் கடவுள் என்று சொல்வதுதான் மிகவும் திமிரான செயல். நன்றியுணர்ச்சி இல்லாதவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்கள். என்று கொந்தளித்தார்.

வன்னியர் சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பா.ம.க கேட்டுப் மிக பெரிய அளவில் போராடியது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட பல சமுதாயங்களை இணைத்து, மேலும் பிற்படுத்தப்பட்டோர் [MBC] என்ற தனி இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார். கல்வி, வேலைகள் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

இந்த இட ஒதுக்கீடு காரணமாகதான் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னிய இன மக்கள் முன்னேறி உள்ளனர். அந்த நன்றிகூட திமுக மீது இல்லையா..

இதையும் படிக்க:  சுப்ரமணிய சாமி மற்றும் ரஜினிகாந்தை இணைத்து வைரலாக பரப்பப்படும் செய்தி உண்மையானதா?

வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீட்டை கருணாநிதி வழங்கியது ராமதாசுக்கு பிடிக்கவில்லை.  ஏனெனில் இதைச் சொல்லித்தான் அவர் அரசியல் நடத்தி வந்தார்.

காடுவெட்டி குடும்பம் ராமதாசுடன் நெருக்கமாக இருந்த, காடுவெட்டி குரு குடும்பம் இப்போது மீண்டும், மீண்டும் ராமதாசை குற்றம் சாட்டி வருகிறது. தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் தான் ராமதாஸ் கவலைப்படுவார். மற்றவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார் என்று காடுவெட்டி குரு குடும்பத்தார் தெரிவித்து வருகிறார்கள்.

எனவே எப்போதும் பாமக தலைவர்களை வன்னியர் சமுதாயத்தினர் புறக்கணித்து அன்புமணிக்கு எதிராக களம் இறங்கும் திமுக வேட்பாளரை வெற்றிபெற செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில் செய்த நன்மைகளை பட்டியல் இடுவது தவறில்லை ஆனால் இவர்களால் மட்டும்தான் சமுதாயம் முன்னேறியது என்றும், காடுவெட்டி குரு குடும்பத்தில் பிரச்சனையை தி.மு.க தூண்டி விட்டு இப்போது அதனை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வன்னியர் வாக்குகளை பிரிக்க நினைப்பதாக குற்றம் சுமத்து கின்றனர்.

இதையும் படிக்க:  வெட்கம் மானம் சூடு சொரணை யாருக்கு இல்லை என்று இப்போது தெரிகிறதா? பாமக கேள்வி அமைதியான ஸ்டாலின்.

©TNNEWS24

Loading...