இந்துக்கள் வாக்கு வங்கி சுப்ரமணிய சாமி சொன்னது நடந்துவிட்டது.. ஓட்டிற்காக திமுக செய்த தில்லாலங்கடி வேலை.

இந்துக்கள் வாக்கு வங்கி சுப்ரமணிய சாமி சொன்னது நடந்துவிட்டது.. ஓட்டிற்காக திமுக செய்த தில்லாலங்கடி வேலை.

சமூகவலைத்தளம்.,

திமுக மீது எப்போதும் மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும் குறிப்பாக ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுவதும், இந்துக்கள் பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை வருட பிறப்பிற்கு வாழ்த்து சொல்லாததும் காலம் காலமாக கருணாநிதி காலத்தில் இருந்து பின்பற்றுவது வழக்கம்.

மேலும் வாழ்த்து சொல்லாதது மட்டுமல்ல தங்கள் தொலைக்காட்சியில் இந்துக்கள் பண்டிகை அன்று மட்டும் விடுமுறை தினம் என போட்டு பெரும்பாண்மை மக்களின் விழாகளை, அவமானப்படுத்துவதாக பலரும் அவர்கள் மீது குற்றம் சுமத்தி வந்திருக்கின்றனர்.

இந்த சூழலில் திமுக தலைமை தேர்தலை கருத்தில் கொண்டு நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல குறிப்பாக இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று எந்த மேடைக்கு போனாலும் தவறாமல் கத்தி வருகிறார்கள்.

இதையும் படிக்க:  திருப்பூரை கைப்பற்றுவது யார் வெளியானது தேர்தலுக்கு பிந்தைய களநிலவரம்.

கனிமொழிகூட பெரியார் படத்தை வைத்தால் ஓட்டு கிடைக்காது, என்று சொல்லியதால் படத்தினை நீக்கி விட்டு தலை நிறைய மல்லிகை பூவும், நெத்தியில் குங்குமம், பொட்டோடு வாக்குகளை சேகரிக்கிறார்.

அந்த அளவிற்கு தமிழகத்தில் இந்துக்கள் எழுச்சி தோன்றியுள்ளதாக திமுக உணர்ந்திருக்கிறது, அதோடு நில்லாமல் இன்று தமிழ் வருட பிறப்பு சித்திரை 1, அன்று தனது தொலைக்காட்சியில் எப்போதும் விடுமுறை தினம் என்றுதான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்கள், அதோடு நில்லாமல் காலம் காலமாக இந்துக்கள் கடைபிடித்து வரும் சித்திரை 1 -தமிழ் புத்தாண்டு இல்லை என்று சொல்லிவிட்டு தை முதல்நாள் தான் தமிழ் வருடப்பிறப்பு என சொல்லிவந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றோ தங்களது தொலைக்காட்சியில் சித்திரை முதல்நாள் என்றும் குறிப்பாக அதில் தமிழ் புதுவருட பிறப்பு என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவேன் என்ற சந்திரபாபு நாயுடு தில்லாக களத்தில் இறங்கி ஓடவிட்ட ஆந்திர பாஜகவினர்.

இதனை வைத்து பார்க்கும் போது அன்று மதுரையில் சுப்ரமணியசாமி ஒரு வார்த்தையினை சொன்னார் இந்துக்கள் வாக்கு வங்கி உருவாகிவிட்டால், திமுகவினரும், கருணாநிதியும் பஜனை பாடிக்கொண்டு வந்து வாக்கு கேட்கவும் தயங்கமாட்டார்கள் என்று. இன்று அதேபோல் நடந்து வருகிறது.

காலம் காலமாக இந்து என்ற ஒரு மதமே இல்லை என்று, சொல்லிவந்த குடும்பம் இன்று நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்றும், எனது மனைவி காலை, மாலை கோவிலுக்கு செல்பவர் என்றும் ஸ்டாலின் பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த அளவிற்கு இந்துக்கள் வாக்கு வங்கி தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.

ஆனால் திமுக இதனை மனதளவில் செய்கிறதா இல்லை தேர்தலுக்காக வருகிற 18 – ம் தேதி வரை மட்டும் நாடகம் நடத்த இருக்கிறதா என்பது தெரியவில்லை, அதே நேரத்தில் இனி இது பெரியார் மண் என்று சொன்னால் ஒத்த ஒட்டு கிடைக்காது என்ற நிலைமை தமிழகத்தில் உருவாகியிருப்பது, விரைவில் தமிழகத்தில் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

இதையும் படிக்க:  நேரலையில் பாஜக வேட்பாளரிடம் அசிங்கப்பட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்.

இனி இதை யாராவது பெரியார் மண் என்று சொல்வார்களா?

©TNNEWS24

Loading...