அடுத்தடுத்து சிவகங்கையில் களம் இறங்கும் மோடி அமிட்ஷா உற்சாகத்தில் H ராஜா புரளிகளுக்கு முற்று புள்ளி.

H. ராஜாவிற்கு ஆதரவாக சிவகங்கையில் களமிறங்கும் மோடி , அமிட்ஷா உற்சாகத்தில் பாஜகவினர் ! வேறு எங்கும் இப்படி இல்லை

காரைக்குடி.,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் H ராஜா போட்டியிடுவதால் இந்த முறை சிவகங்கை தொகுதி அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது. பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக சிவகங்கை தொகுதியும் பார்க்கப்படுகிறது.

கட்சி நலன் மட்டும் சாராமல் இந்து சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் தாக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட போது H ராஜா தன்னால் முடிந்த உதவிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கிறார்.

சமீபத்தில் திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் சில மத வெறியர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்தார், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு, உலகில் உள்ள இந்து அமைப்புகள் தன்னார்வலர்களிடம் நிதியை வசூல் செய்து அவரத்துக்குடும்பத்திற்கு அளித்தார்.

இதையும் படிக்க:  கொங்கு மண்டலத்தில் நிச்சயம் பாஜக கூட்டணி தான் வெற்றிபெறும் அடித்து கூறும் வானதி சீனிவாசன்!

இதனால் பலர் அவர் மீது வெறுப்பில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தனர். ஆனால் மோடியும், அமிட்ஷாவும் இந்தமுறை நிச்சயம், H ராஜாவின் உழைப்பினை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு சிவகங்கையில் போட்டியிடவாய்ப்பு அளித்தனர்.

அத்துடன் இல்லாமல் வருகின்ற ஏப்ரல் – 8 ம் தேதி H ராஜாவினை ஆதரித்து பிரதமர் மோடி காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். மேலும் அதற்கு முன்பாக பாஜக தேசிய தலைவர் அமிட்ஷா ஏப்ரல் 2- ம் தேதி, H ராஜாவினை ஆதரித்து திருமயம் தொகுதியில் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

இப்படி தமிழகத்தில் H ராஜாவிற்கு மும்கியத்துவம் கொடுக்கப்பட்டது அவரது உழைப்பிற்கும், கட்சி பணிக்கும் ஆற்றிய அங்கீகாரம் என பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிக்க:  இலங்கை குண்டுவெடிப்பு ராமலிங்கம் படுகொலை தமிழக இஸ்லாமியர்களை கடுமையாக எச்சரித்த கல்யாணராமன் !

சிவகங்கை தொகுதியில் இந்த முறை H ராஜா வெற்றி வாய்ப்பு மோடியின் பிரச்சாரத்திற்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. H ராஜாவிற்கு எதிராக பலரும் புரளிகளை கிளப்பி வந்த வேலையில் மோடி, அமிட்ஷா வருகை பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

©TNNEWS24

Loading...