இந்து தீவிரவாதி என்ற கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த மோடி !

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிட்டுருந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன்.

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பிரச்சாரம் செய்தார் அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறினார்.

அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில் பல அரசியல் கட்சியினரும் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி எந்த இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று கூறினார்.

ஒருவன் தீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே இல்லை என்றும் இந்த உலகமே ஒரு குடும்பம் என்பது தான் இந்து தர்மத்தின் நம்பிக்கை.

இதையும் படிக்க:  நீ இந்து என்று மோடியை எதிர்த்தால் , அந்த காரணத்திற்காக நாங்கள் அவரை ஆதரிப்போம் . கிருஸ்துவர்கள் , முஸ்லிம்களுக்கு போட்டியாக களமிறங்கும் பங்காரு அடிகளார்

அதில் யாரையும் காயப்படுத்துவதையோ கொலை செய்வதையோ இந்து தர்மம் அனுமதிக்காது எனவே ஒருவன் தீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவாக இருக்க முடியாது என்று கூறினார் பிரதமர் மோடி.

இந்த பேட்டியின் மூலம் இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய கமலஹாசனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மோடி.

கமலின் கருத்திற்கு மோடி பதில் அளித்திருப்பதன் மூலம் கமல் இதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...