மோடியை திட்டுவதாக நினைத்து யார் வெற்றிபெறுவார் என்ற உண்மையை போட்டுடைத்த அமெரிக்க நாளிதழ்.

மோடியை திட்டுவதாக நினைத்து யார் வெற்றிபெறுவார் என்ற உண்மையை போட்டுடைத்த அமெரிக்க நாளிதழ்.

நியூயார்க்.,

பிரபல அமெரிக்க பத்திரிக்கையான டைம் நாளிதழ் கடந்த 9 – ம் தேதி தனது ஆசியா நாட்டிற்கான பிராந்திய தொகுப்பில் ஒரு கட்டுரை ஒன்றிணை மோடியின் புகைப்படத்துடன் கூடிய அட்டை படத்துடன் வெளியிட்டது, இது குறித்து இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. சில தமிழ் பத்திரிகைகள் கூட மோடி இந்தியாவை பிளவு படுத்துவதாக டைம்ஸ் வெளியிட்ட செய்தியை இன்று சிறப்பு ஒளிபரப்பாக வெளியிட்டுள்ளன.

டைம் வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் மோடி மீண்டும் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவை ஆட்சி புரிவாரா? என்ற கோணத்தில் செய்தியை வெளியிட்டிருந்தது ஏன் ஒரு படி மேலே போய் மோடி, வளர்ச்சியை முன்னிறுத்தி 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றார் என்றும், இப்போது அவர் இந்துத்துவத்தை கையில் எடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிக்க:  கேரளாவில் நடந்த கொடூரம் ஐஎஸ் ஐஎஸ் கொடியை எரித்த இளைஞர் கைது !

மேலும் மோடி வாரணாசியில் நடத்திய ஊர்வலம் மூலம் நாம் அறியலாம் என்றும் குறிப்பிடத்துடன் எப்படி கிறிஸ்துவர்களுக்கு செருசேலமோ, முஸ்லிம்களுக்கு மெக்கவோ, அதுபோல் இந்துக்களுக்கு வாரணாசி என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் மோடியின் வரலாறுகளை கட்டுரையாக எழுதி முழுவதும் மோடியை ஒரு முழு நேர மதவாதி போல முன்னிறுத்தி கட்டுரையை வடிவமைத்திருக்கிறார்கள்.

அதில் அவர்கள் அறிந்தோ அறியாமலோ மீண்டும் மோடிதான் ஆட்சிக்கு வரப்போகிறார், அடுத்த 5 ஆண்டுகள் மோடி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா இல்லை மதவாதத்தை திணிப்பாரா என்ற நோக்கத்தில் கட்டுரையின் சாராம்சத்தை கடைசியில் முடித்திருப்பது. மோடிதான் மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவார் என்ற செய்தியை சொல்லாமல் சொல்லி சென்றுள்ளது.

தற்போது 5 – கட்ட தேர்தல் முடிந்துள்ள சூழலில் மீதம் இரண்டு கட்ட தேர்தல்கள் மிச்சமிருக்கும் சூழலில் அமெரிக்காவின் பிரபல நாளிதழ் வெளியிட்ட கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் ? பலமுறை எதிர்காலத்தை சரியாக கணித்த க்ரீன்ஸ்டோன் லோபோ வெளியிட்ட கணிப்பு !

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

மேலே இருக்கும் ஏதேனும் ஒரு விளம்பரத்தை தொடுவதன் மூலம் எங்களது முயற்சிக்கு நீங்களும் உதவலாம் ஒரு நொடி மட்டும் செலவு செய்து. நன்றி

Loading...