வாரணாசிபோல் இராமநாதபுரம் முழுவதும் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள் !

வாரணாசிபோல் இராமநாதபுரம் முழுவதும் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள் !

இராமநாதபுரம்

இந்தியா முழுவதும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதல்கட்ட பட்டியலை நேற்று வெளியிட்டது பாஜக.

மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது தொகுதியான வாரணாசியில் மோடி திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார், அதனை தொடர்ந்து வேறு எங்கும் பொதுக்கூட்டங்களில் மட்டுமே அதிக முறை உரையை நிகழ்த்தியிருக்கிறார் பிரதமர்.

இந்த முறை வாரணாசியை போலவே தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதியான இராமநாதபுரத்திலும் மோடி திறந்த வாகனத்தில் வலம் வந்து பாஜகவின் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மோடி பயணம் செய்யும் இடங்கள் குறித்த தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாம். காசியில் எப்படி பாஜக ஆட்சி நடக்கிறதோ அதுபோல் இந்துக்களின் புனித அடையாளங்களில் ஒன்றான இராமேஸ்வரத்தையும் வெல்லவேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் கனவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த வைகோ வெடிவெடித்து கொண்டாடிய பாஜகவினர்.. எந்த ஊரில்

எனவேதான் திருப்பூர், நீலகிரி பகுதிகளை கடந்து பாஜக இராமநாதபுரம் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது.

மோடி இராமநாதபுரம் பகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்ற தகவல் பரவியது முதல் இப்போதே இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆனால் எதிர்கட்சிகளோ முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மத ரீதியான மோதல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

©TNNEWS24

Loading...