தமிழகத்தில் தங்குகிறார் மோடி !

தமிழகத்தில் தங்குகிறார் மோடி !

தேனி.,

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.

கொச்சியில் தனது பிரசாரத்தை முடிக்கும் அவர் விமானம் மூலம் இரவு 9 -மணிக்கு மதுரை வருகிறார்.

பகல் 11 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரவீந்திரநாத்குமார் (தேனி) மற்றும் ராஜ்சத்யன் (மதுரை), திண்டுக்கல் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

அதன்பிறகு பிற்பகல் இராமநாதபுரம் செல்லும் மோடி, பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), H.ராஜா (சிவகங்கை) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

இன்று தமிழகம் வருகைதரும் மோடி இன்று இரவு தமிழகத்தில் தங்குவதாகவும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க:  திருப்பூரில் மோடி வருகைக்கு எதிராக திட்டம் தீட்டிய பெரியாரிஸ்ட்களை அடித்து விரட்டிய பாஜக

©TNNEWS24

Loading...