முதல் சனாதான இந்து ஆலயத்தை திறக்கிறார் மோடி கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் மன்னர் குடும்பத்தினர்

முதல் இந்து ஆலயத்தை திறக்கிறார் மோடி கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் மன்னர் குடும்பத்தினர்.

துபாய்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 – ம் தேதி அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து ஆலயத்தை திறந்து வைப்பதற்காக மூன்று மதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

அபுதாபியில் மிடில் ஈஸ்ட் நகரில் சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது இந்த இந்து ஆலயம், இதற்கான முழு செலவையும் துபாய் மன்னர் குடும்பம் ஏற்றுள்ளது. இதனை BAPS நிறுவனம் வடிவைமைத்து, மற்றும் பராமரிப்பு பணியினையும் மேற்கொள்ள உள்ளது.

துபாய் நாட்டில் சுமார் 3.3 மில்லியன் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் அவர்களின் பயன்பாட்டிற்கு, மற்றும் மன அமைதி கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதமாக UAE அரசு இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறது.

இதையும் படிக்க:  தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்காக மொட்டை அடித்து கொண்ட இளைஞர்கள்!
File photo

இதற்கான டிசைன் மற்றும் நிர்வாக பணிகள் மோடியின் முதல் துபாய் பயணத்தின் போது 2015- ம் ஆண்டு திட்டமிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் மன்னர் குடும்பத்தினர் கோவிலைத்திறந்து வைக்க மோடியை அழைத்துள்ளனர்.

இதற்கென மோடி வருகிற 20 – ம் தேதி அபுதாபி செல்ல இருக்கிறார். அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாட்டினை மன்னர் குடும்பம் செய்துள்ளதாகவும், கோவிலுக்குவருகை புரியும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது அரபுநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் மோடியை வரவேற்று தங்கள் வாழ்த்துக்களை இப்போதே சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

காவி கொடி அபுதாபியிலும் இனி பறக்கும் என்று பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  இரும்பு பெண்மணியாக வலம்வந்த மம்தா தனது கட்சி தொண்டர்களால் மேடையிலேயே விரட்டப்பட்டதற்கான காரணங்கள் இவைதான்.

©TNNEWS24

Loading...