தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு வாழ்த்து சொன்ன மோடி !

தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு மோடி வாழ்த்து காரணம் என்ன?

ட்விட்டர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஹரிபிரபாகரன் என்பவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திறமையானவர்களை கண்டறிந்து அவர்களின் முயற்சியை வாழ்த்துவது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம் அதைபோல் இன்று ஹரிபிரபாகரன் தனது ட்விட்டர் கணக்கில் ‘தூய்மை இந்தியா ‘ திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கழிப்பறைகள் குறித்து பயனாளிகள் பகிர்ந்து கொண்ட தகவல்களை மோடியை டேக் செய்து பதிவிட்டுருந்தார்.

அதற்கு மோடி நல்ல முயற்சி என்று வாழ்த்தியதோடு இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போது ஹரிபிரபாகரன் பகிர்ந்த தகவலானது இந்திய அளவில் அனைவராலும் விரைவாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:  ஏலத்திற்கு வந்த மோடியின் பொருட்கள்

©TNNEWS24

Loading...