பெரியாரிஸ்ட்களை தொடர்ந்து கதறும் நக்கீரன் உங்களுக்கு வந்தா ரத்தம் ! காவல் நிலையத்தில் தஞ்சம் !

பெரியாரிஸ்ட்களை தொடர்ந்து கதறும் நக்கீரன் உங்களுக்கு வந்தா ரத்தம் ! காவல் நிலையத்தில் தஞ்சம் !

சென்னை.,

தினசரி வலைத்தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி காவல் நிலையத்தில் நக்கீரன் பத்திரிக்கை புகார் ஒன்றிணை அளித்துள்ளது. வார்த்தைக்கு வார்த்தை முதல்வர், சக அமைச்சர்கள், ஆளும் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் நக்கீரன் அதை தனது கருத்து சுதந்திரம் என்று பீத்திக்கொண்டு திரிந்த வரலாறுகளை அனைவரும் அறிவர்.

அப்படி இருக்கையில் அதே பாணியில் தனது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்திய தினசரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது, நக்கீரனின் இரட்டை வேதத்தையும், பதற்றத்தையும், தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி தனது விடுதலை பத்திரிகையில் எவ்வாறு TNNEWS24 இணையத்தை முடக்கவேண்டும் என்று கூறினாரோ அதை போல தினசரியின் கருத்து சுதந்திரத்தை முடக்க நக்கீரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

அதற்கு தினசரி ஆசிரியர் அளித்த தெளிவான விளக்கத்தை பார்க்கலாம்.

கருத்துச் சுதந்திரம் | எழுத்துச் சுதந்திரம் | பத்திரிகை சுதந்திரம் | ஊடக சுதந்திரம்…

இதெல்லாம் நக்கீரனுக்கு மட்டும் தான் உண்டு போலும்!

நாம் நக்கீரன் இதழுக்கு விரோதி அல்ல; நக்கீரன் செய்யும் இதழியல் முறைக்குதான் எதிரி!

ஒரு சமூகத்தில் பிளவுபட்ட கருத்துகளை, மனக் கொந்தளிப்புள்ள விஷயங்களை எழுதி, தூண்டிவிடுவது எவ்வளவு மோசமானது என்பதை இதழாளர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இந்த பேட்டிக் கட்டுரையை நாம் வெளியிட்டோம்!

இஸ்லாமிய சமூகத்தில் இளைஞர்கள் படித்து, வேலைக்கு வெளியில் வந்து, மற்ற சமூகத்தினருடன் கலந்து பழகி, இந்த நவீன யுகத்தில் ஒற்றுமை உணர்வு மேலோங்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியனின் உள்ளுணர்வு! இந்துவின் உணர்வு!

ஆனால், மொட்டாக முளைவிடும் முன்பே, இருபதுகளைத் தாண்டாத பதின் பருவ இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டுவது போல்… வதந்திகளைப் பரப்பி, குறிப்பாக வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் பிள்ளை பிடிப்பவர், அங்கே கலவரம் இங்கே வன்முறை, இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு சமூகப் பதற்றத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் வேலையை இதழாளர்கள் மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது!

அப்படி ஒரு கட்டுரையைத்தான் நக்கீரன் கடந்த மே 8-10ம் தேதியிட்ட இதழில் வெளியிட்டிருந்தது. எத்தனையோ கட்டுரைகள் இது போல் வெளியிடப் பட்டிருக்கின்றன என்றாலும், அவற்றை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு செல்லாமல் கடந்துவிடுபவர்கள் பலர். ஆனால் இந்தக் கட்டுரை மயிலாடுதுறை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, இளைஞர்களைக் கல்லெறியத் தூண்டி, வன்முறைக்கு வித்திட்டதாக மயிலாடுதுறையில் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் இருந்தவர்கள் கூறினர்…

இனி… நாம் தளத்தில் வெளியிட்ட கட்டுரையும்… அதற்கு நக்கீரன் சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரும்…

மேற்கொண்டு விளக்கங்களை இதழியல் | பத்திரிகையியல் படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்…


நக்கீரன் நிறுவனம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 08-10 நக்கீரன் இதழில் ” அரசு உதவி பெறும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடைபெறுவதாக அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஒரு சிலர் நக்கீரனுக்கு தகவலளித்தனர்.

இதனை அடிப்படையாகக்கொண்டு நக்கீரன் இதழ் இந்த விவகாரம் குறித்து தீர விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பேட்டியெடுத்து, அதனை கட்டுரையாக வெளியிட்டது.

இதையும் படிக்க:  பாதுகாப்பு வாகனமும் தரமறுப்பு அப்புறம் போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் நீதிமன்றத்தில் கொந்தளித்த பொன்மாணிக்கவேல்

இந்நிலையில் கடந்த 14.05.2019 அன்று ‘தமிழ் தினசரி’ என்ற இணையதளத்தில், இந்த கட்டுரை தொடர்பாக நக்கீரனை மிரட்டும் வகையில் பதில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டது.

“நக்கீரன் அலுவலகத்தில் கள்ளநோட்டு அடிக்கிறார்கள், திடுக்கிடும் தகவல்! இனி நாங்களும் சொல்லலாமே” என ஆரம்பித்த அந்த கட்டுரை நக்கீரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், நக்கீரனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், பத்திரிகை சுதந்திரத்தை கெடுக்கும் வகையிலும் அமைந்தது.

சென்னை மைலாப்பூர் முகவரியிலிருந்து இயங்கி வரும் இந்த தினசரி(dhinasari.com) இணையதளத்தில் பொதிகைச்செல்வன் என்பவர் இந்த கட்டுரையை எழுதியிருந்தார். எனவே நக்கீரனுக்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிராக செயல்பட்டு பொய்யான செய்திகளை பரப்பிய குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் மீதும், கட்டுரை ஆசிரியர் பொதிகைச்செல்வன் மற்றும் அந்த இணையதளத்தின் உரிமையாளர் செங்கோட்டை ஸ்ரீராம் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டின் இறுதியில் நக்கீரன் இதழுக்கும், அதன் ஆசிரியரின் பெயருக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய சிலரின் மீது கொடுத்த புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளது.

அதனுடன் சேர்த்து இதனையும் விசாரித்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


தமிழ் தினசரி இணையத்தில் வெளியான செய்திக் கட்டுரை:

நக்கீரன் இதழின் அலுவலகத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கிறார்கள்… அதுவும் இரவு பகலாக அச்சகத்தில் அதற்கான வேலைகள் நடக்கின்றன. அருகில் வசிப்போர் தூங்க முடியவில்லை! நிம்மதியாக  அந்தப் பகுதியில் நடமாடவே அச்சப் படுகிறார்கள். மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து கூறியும், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று போலீசார் கையைப் பிசைகிறார்கள்… என்றெல்லாம் செய்திகளை நாங்களும் சொல்லலாமா? – என்று கேள்வி எழுப்புகின்றனர் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்!

மயிலாடுதுறையில்  ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் மற்றும் முகாம் மீது கல்வீசித் தாக்கிய ஆறு பேரை கைது செய்துள்ளது போலீஸ் என்பதுதான் இன்றைய செய்தி. இதற்கும் நக்கீரனுக்கும் என்ன தொடர்பு?!

முதலில் இன்றைய செய்தி: மயிலாடுதுறையில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த பொறுப்பாளர் மீது கல் வீசி தாக்கிய சம்பவத்தில் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியில் ஆர்எஸ்எஸ் சார்பில் பண்பு பயிற்சி முகாம் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. இந்த முகாம் நாளை புதன்கிழமை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது! இதில் பாதுகாப்பு பணிக்காக ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த துரை சண்முகம் மாவட்ட பொறுப்பாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

70 வயதான துரை சண்முகம் மீது நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்கி எரிந்தும் பயிற்சி மையத்தின் கதவுகளை திறக்க முயற்சி செய்தும் தரக்குறைவாக திட்டியும் சென்றுள்ளனர்! கற்கள் அவர் மீது வீசப்பட்டதில் துரை சண்முகம் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் 15 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் பயிற்சி முகாம் நடைபெற்ற பள்ளிக்கூடம் முன்பு அதிகாலையில் நின்றவர்களை சிசிடிவி பதிவுகளை வைத்து அடையாளம் கண்டு வடகரை பகுதியைச் சேர்ந்த ஜாசிக் (19 வயது), முகமது சபிக் (19 வயது), முகமது அல்பா (18 வயது), இஜாஸ் அகமது (18 வயது), முகமது இர்பான் (18 வயது), அப்துல் பாசிக் ரஹ்மான் (19 வயது) என ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க:  இந்தியன் வேறு தமிழன் வேறு என்று பிரித்த பிரிவினைவாதிகளுக்கு சம்பட்டி அடி கொடுத்த தமிழர்கள் லட்சக்கணக்கில் ஒன்று சேர்ந்து அஞ்சலி

~ இது குறித்து மயிலாடுதுறை முகாமில் பங்குபெற்றுள்ள சிலருடம் நாம் பேசினோம். அதற்கு அவர்கள் அளித்த பதில், அதிர்ச்சியாக இருந்தது. காரணம், இவ்வாறு உணர்ச்சிகரமாகத் தூண்டப் பட்ட, வாழ்க்கையில் இப்போதுதான் அடி எடுத்து வைக்கும் பதின் பருவ அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை வன்முறைக்கு தூண்டிவிட்டு அவர்களை பயங்கரவாதிகளின் பக்கம் நகர்த்தும் மிக மோசமான செயலைச் செய்பவர்கள் யார்? அவர்களை இவ்வாறு தூண்டிவிடுவது யார்? என்று நம்மிடம் பதில் கேள்வி எழுப்பும் அவர்கள், ஒருபுறம் பயங்கரவாத இயக்கங்கள் என்றால், இன்னொரு புறம் நக்கீரன் போன்ற பயங்கரவாதத் தொடர்புள்ளவர்கள் பணி செய்யும் ஊடகங்களும் தான் என்கின்றனர்.

வருடம் தோறும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கோடைக்கால பண்புப் பயிற்சி முகாம் நடத்துவது வழக்கம். சுமார் 20 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், யோகா, மருத்துவம், விளையாட்டு, குழு விவாதம், பிராணாயாமப் பயிற்சி, தேச பக்திப் பாடல்கள், வல்லுநர்களின் ஆலோசனைகள், சொற்பொழிவுகள் ஆகியவை நடபெறுவது வழக்கம். வெளிப்படையாக திறந்த வெளியில் பலரும் அணுகும் வகையில் பயிற்சிகள் நடத்தப் படுகின்றன.

பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கீழ்ப் பகுதியில் உள்ள திறந்த வெளி அரங்கில் சொற்பொழிவுகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. மேல் தளத்தில் மாணவர்களின் சேர்க்கைக்காக பெற்றோர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பெற்றோர்களைப் போல் முகாம் நடத்தும் பள்ளிக்கு வந்த நக்கீரன் நிருபர், மேல் தளத்தில் நின்று போட்டோ வீடியோ எல்லாம் எடுத்துக் கொண்டு, அவராகவே இட்டுக் கட்டி கதைகளை எழுதியிருக்கிறார். அது நக்கீரனில் வெளிவந்துள்ளது என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.

நக்கீரனில் வெளியான நூறு சதவீத பொய்களை மட்டுமே தாங்கிய இந்தக் கட்டுரைதான், இன்று ஆறு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களைத் தூண்டிவிட்டு, அவர்கள் கல்லெறிதலுக்கும் வன்முறைக்கும் ஈடுபடுவதற்குக் காரணமாகவும், அதன் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுப்பதற்கும் காரணமாகவும் அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

நக்கீரன் கூறுவது போல் என்றால், அரசு உதவி பெறும் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ, இஸ்லாமிய பள்ளிகளையும் இதே போல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். காரணம், அங்கே தான் அரசியல் பிரசாரம், இவருக்கு ஓட்டு போடு அல்லது போடாதே என்று வெளிப்படையாக பாதிரிகளும் இமாம்களும் பேசுகிறார்கள்.

நக்கீரன் இதழே, அரசு மானியத்தில் அச்சுத்தாள் வாங்கித்தான் அச்சடிக்கப் படுகிறது. அதே அச்சுத்தாளில்தான் பணத்தை பெட்டி பெட்டியாய் வாங்கிக் கொண்டு, பொய்களை அள்ளித் தெளிக்கிறது என்று சுட்டிக் காட்டும் அவர்கள், காரணமே இல்லாமல் தேவையற்ற பீதியைக் கிளப்பிய நக்கீரன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருமுகிறார்கள்.

காரணம், இந்த ஆர்.எஸ்.எஸ்., பண்புப் பயிற்சி முகாம்களுக்கு முறையான காவல் துறை அனுமதி பெறப் படுகிறது. காவல் துறையின் உளவுப் பிரிவினர் எந்நேரமும் உடன் இருக்கிறார்கள். காவலர்களின் பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது. எல்லாம் வெளிப்படையாகவே நடக்கின்றன. இங்கே எந்த ரகசியங்களும் இல்லை. அப்படி ரகசியங்கள் இருந்திருந்தால், நக்கீரன் நிருபரால் எப்படி முகாமுக்குள் வர முடிந்தது?! போட்டோ வீடியோக்கள் எடுக்க முடிந்தது?! என்று கேள்வி எழுப்பும் அவர்கள், நக்கீரனில் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்! எனவே நாங்களும் சொல்லலாமா?! நக்கீரன் அச்சகத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கிறார்கள்; அரசு அதிகாரிகளிடம் இருந்து செய்திகளைப் பெறுவதற்காக இரவு நேரத்தில் பலான தொழில் செய்பவர்களை அனுப்பி வைத்து பிளாக் மெயில் செய்கிறார்கள்  என்று?!  – என கோபத்துடன் கேட்கிறார்கள்!

இதையும் படிக்க:  பாகிஸ்தான் ஒரு நாள் இந்தியாவிடம் அழியும் அன்றே சொன்ன தேவர் காரணம் இதுதான் !

இந்த முகாமுக்கு, ஆர்.எஸ்.எஸ்., (தமிழ்நாடு) சங்க சிக்ஷா வர்க (சிறப்பு) முதலாம் ஆண்டு, கோடைகால பயிற்சி முகாம் என்று பெயர். இங்கே, சேவா காரியங்ககள் என செய்கின்றோம். எந்த வகையில் எல்லாம் சமுதாய சேவை செய்வது, பேரிடர் காலங்களில் எப்படி உடனே களம் இறங்குவது, எவ்வாறு மக்களைக் காப்பாற்றுவது, உணவு உள்ளிட்டவை விநியோகம் செய்யும் போது எச்சரிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்தெல்லாம் விவாதிக்கிறோம்.

இந்த முகாமில் பொறுப்புள்ளவர்கள், பிரபலங்களும் வந்து கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் முதல் பாஜக., எம்.எல்.ஏ.,வான பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த வேலாயுதம் இந்த முகாமில் முழு நாட்களும் கலந்து கொண்டிருக்கிறார்.

அண்மைக் காலத்தில் நடந்த புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது, எங்களது உதவிப் பணிகள், சேவாகாரியங்கள் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, அவரவர் அனுபவங்கள், சந்தித்த இன்னல்கள், அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தெல்லாம் பேசுகிறோம். .மரக் கன்றுகள் நடுவது, கழிப்பறைகளை சுத்தம் செய்வது, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது, கோபூஜை செய்வது, பசுக்களை பராமரிப்பது, இருக்கும் இடத்தை தூய்மையாக பேணுவது, மூத்தவர்களுக்கு உதவிகள் செய்வது என்று எல்லோரும் வித்தியாசம் ஏதுமின்றி பயிற்சி பெறுகிறோம். அக்னிஹோத்ரம் என்பது குறித்து பயிற்சி கொடுக்கப் பட்டது.

யாகத்தில் தீ வளர்த்து மந்திரம் சொல்வது போன்று, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவரவர் அக்னிஹோத்ரம் செய்வதற்கான பயிற்சி திறந்த வெளியில் மைதானத்தில் கொடுக்கப் பட்டது.மாத்ரு போஜன் – அதாவது அம்மா கையால் சாப்பிடுவது என்று, முகாமில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு அம்மாக்களே உணவு பரிமாறும் நிகழ்ச்சியும் உண்டு. அனைவருக்கும் உணவு அளித்து, நாமே பரிமாறி நாமே அனைத்து வேலைகளையும் செய்து ஒரு சுயசார்புத் தன்மைப் பண்பை வளர்க்கிறோம்.

இங்கே நல்ல பண்புகளைத்தான் கற்றுத் தருகிறோமே தவிர, நக்கீரன் நிருபர் இட்டுக் கட்டிய கதைகளைப் போல், அடுத்தவரைத் தாக்கவோ, இன்னும் சொல்லப் போனால் வடிகட்டிய பொய்யான ‘இரவில் ஆயுதம் ஏந்தி தாக்குவது’ என்பதெல்லாம் நாங்கள் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை!

கபடி விளையாடுவது ஆயுதப் பயிற்சியில் வரும் என்று எழுதும் நிருபரும் அதை பதிப்பிக்கும் ஆசிரியரும் எத்தகைய அறிவாளிகள் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

இப்படி பீதியைக் கிளப்பி, ஒரு சமூகத்தைத் தூண்டுவிட்டு, இப்போது இஸ்லாமிய இளைஞர்கள் 6 பேர் கைதுக்குக் காரணமான நக்கீரனை அரசு ஏன் தடை செய்யக் கூடாது?! என்று கேள்வி எழுப்புகிறார்கள் அந்த முகாமில் கலந்து கொண்டவர்கள்!

நாளை அதாவது மே 15ம் தேதி இந்த முகாம் நிறைவு பெறுகிறது. அதன் அழைப்பிதழும் தருகிறோம். இயன்றால் இதனை நாங்கள் சமூக வலைத்தளத்திலும் நேரடியாகப் போடுவோம்..பார்த்துக் கொள்ளட்டும்! – என்கிறார்கள்!

Loading...