நயன்தாரா விவகாரம் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய உதயநிதி.

நயன்தாரா விவகாரம் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய உதயநிதி

சென்னை.,

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற பட விழா ஒன்றில் பங்கேற்கவந்த ராதாரவி நயன்தாரா குறித்து பேசிய பேச்சுக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகியது, இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க, உதயநிதி அன்பழகனிடம் பரிந்துரைத்ததன் பேரில், இன்று திமுகவில் இருந்து தேதி குறிப்படாமல் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார் ராதாரவி.

நடிகைகளில் முன்பு K.R. விஜயா போன்றோர் தான் முன்பு கடவுள் வேஷத்தில் நடிப்பார்கள் இப்போது யார் வேண்டுமானாலும் அதில் நடிக்கிறார்கள், கையெடுத்து கும்பிடுவதுபோல் இருப்பவர்கள் நடித்த இடத்தில், கூப்பிடுவது போல் உள்ளவர்களும் நடிக்கிறார்கள் என்று நயந்தாராவை விமர்ச்சித்து ராதாரவி பேசினார்.

இதையும் படிக்க:  தர்பார் மிரட்டும் ரஜினியின் பிரஸ்ட் லுக் போஸ்டர் , இந்த படத்தின் கதாநாயகி யார் என்று தெரியுமா?

இதற்கு பலதரப்பிலும் கண்டனம் எழுந்தது, இயக்குனர் விக்னேஷ் சிவன் கடுமையாக ராதாரவியை கண்டித்தார். எனவே உதயநிதி ராதாரவியை திமுகவில் இருந்து முழுவதும் நீக்க சொல்லி வலியுறுத்தினராம், ஆனால் ஸ்டாலின் தலையீட்டின் பேரில் கட்சி ஒழுங்கு நடவடிக்கையை மீறி ராதாரவி நடந்து கொண்டதாக தற்காலிகமாக நீக்கி அறிவித்திருக்கிறார், திமுக பொது செயலாளர் அன்பழகன்.

©TNNEWS24

Loading...