இந்தியாவிற்கு நீரவ் மோடியை நாடுகடத்தலாம் இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி !

இந்தியாவிற்கு நீரவ் மோடியை நாடுகடத்தலாம் இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி

லண்டன்

இந்தியாவில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் பெறும் நிதிமுறைகேடு குற்றச்சாட்டுக்கு இலக்கான தொழிலதிபரும் வைர வியாபாரியான நீரவ் மோடி பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடனை பெற்றுவிட்டு அதனை திருப்பி செழுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு நீரவ் மோடியின் கைது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்தியாவில் நீரவ்மோடிக்கு பல மாநிலங்களில், மற்றும் வெளிநாடுகளிலும் வைர நகை கடைகள் உள்ளது என்பதும் …காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பஜ்சாப் நேஷனல் வங்கி நீரவ்மோடிக்கு 11,360 கோடி கடன் கொடுத்தது….ஆனால் அதை அவர் சரியாக செலுத்தாமல் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.அவ்வாறு நிதி மோசடி செய்த நீரவ் மோடியை அரசாங்கம் தேடியபோது அவர் பிரித்தானியாவுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.

இதையும் படிக்க:  Youturn போலி நடுநிலைக்கு facebook கொடுத்த அடி இனி வாயில் வடை மட்டும்தான் சுடலாம் விரட்டி அடித்த பரிதாபம்.

இந்த நிலையில் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் பிடியானைப்படி நீரவ்மோடி நேற்று லண்டனில் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய காவல்துறை அறிவித்தது.

இதனையடுத்து நீரவ்மோடியை நாடுகடத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது ,இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கையை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில் சரியாக 33 நாட்களுக்குள் வழக்கினை முடித்து நீரவ் மோடியை இந்தியா அனுப்பலாம் என அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.

©TNNEWS24

Loading...