இனி பள்ளி சான்றிதழில் ஜாதி பெயர் குறிப்பிடப்படாது , தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு ! எதனால் தெரியுமா?

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வி துறையில் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று இரவு ஒரு அறிவிப்பு வெளியானது, அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கும் , ஒருபள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற நினைக்கும் மாணவர்களுக்கும்,

மாற்று சான்றிதழ் வழங்கப்படும் அதில் ஜாதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இனி அந்த சான்றிதழில் ஜாதியின் பெயர் குறிப்பிடப்படாது

ஜாதியை அடையாளம் காண வருவாய் துறையினர் வழங்கிய ஜாதி சான்றிதழ் இருப்பதால் மாற்று சான்றிதழில் ஜாதியை குறிப்பிட தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் அந்த அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் விருப்பப்படி ஜாதி என்ற இடத்தில் ஜாதியற்றவர் என்றோ , ஜாதி சான்றிதழை பார்க்கவும் என்றோ , எல்லை அந்த இடத்தை கலியாகவோ விடலாம் என்று அரசு கூறியுள்ளது.

இதையும் படிக்க:  ஓலா கால் டாக்ஸி புக் செய்து துணிகரமாக கொள்ளை அடித்த திருடர்கள்!

இதற்கான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் , பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...