ரவுடிகளின் கூடாரமாகிய தமிழகம் பயனடைந்த திட்டத்தை சொல்லி மோடிக்கு வாக்கு கேட்ட அப்பாவி முதியவர் அடித்து கொலை !

ரவுடிகளின் கூடாரமாகிய தமிழகம் பயனடைந்த திட்டத்தை சொல்லி மோடிக்கு வாக்கு கேட்ட அப்பாவி முதியவர் அடித்து கொலை !

தஞ்சை

மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர் கொலை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு நடந்து வருகின்றனர் .

தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் வயது -75.

ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார்.
இவருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர் .

மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஏழைகளுக்கு குறைந்த விலையில் மாத்திரைகள், மருந்துகள் கொடுக்கும் திட்டத்தால் கவரப்பட்டு பின்னாளில் மோடியின் ஆதரவாளராக மாறி இருக்கிறார். மேலும் பல ஏழைகளுக்கு அதன் பயனை சொல்லி வாக்குகளும் சேகரித்திருக்கிறார்.

இதையும் படிக்க:  கட்சி ஆரம்பித்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று சொன்ன கௌதமன் இன்று கட்சி ஆரம்பித்திருக்கிறார் எப்போது எங்கு வரட்டும் நெட்டிசன்கள் கேள்வி?

மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்றே வலியுறுத்தி வந்திருக்கிறார் முதியவர். இந்த சூழலில் முதியவர் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு அங்குள்ள முதியவர்களிடம் பிரச்சாரம் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்னும் நபர் வேற்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கோபிநாத், முதியவர் என்றும் பாராமல் கோவிந்தராஜை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் முதியவர் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையும் படிக்க:  பல கோடி பணத்துடன் சிக்கியது விடுதலை சிறுத்தை இதற்குதான் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தகூடாது என்றாரா?

எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்தனர்.

தான் பெற்ற பலனை மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதியவர் கொல்லப்பட்டது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...