தேனி தொகுதியில் நேரடியாக களம் இறங்கும் மோடி.. கருத்து கணிப்புகள் சொல்வது என்ன வெற்றி யாருக்கு?

தேனி தொகுதியில் நேரடியாக களம் இறங்கும் மோடி.. கருத்து கணிப்புகள் சொல்வது என்ன வெற்றி யாருக்கு?

தேனி.,

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் O. பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார், இவரை ஆதரித்து மோடி வருகிற 13- ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரிக்கிறார்.

அப்போது அங்கு போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்தும் மோடி வாக்கு சேகரிக்க இருக்கிறார். இதற்கிடையில் மோடியின் வருகை குறித்து பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அமமுக வேட்பாளர், தங்க தமிழ்செல்வன் ஏற்கனவே, தொகுதியில் ஓ. பி.எஸ் தரப்பினர் பணத்தை வாரி இறைப்பதாகவும், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும், தற்போது மோடியின் வருகை மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றபெற எதையும் செய்வார்கள் என்று குற்றம் சுமத்துகிறார் .

இதையும் படிக்க:  மற்றொரு விடியோவை வெளியிட்டார் பாண்டே இந்தமுறை சந்தேகத்திற்கு வாய்ப்பே இல்லை.

கடந்த முறை தமிழகம் வந்த மோடி பாஜக மற்றும் அதன் வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்திருந்தார், தற்போது கூட்டணி கட்சியான அதிமுக தரப்பினரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல் தேனிக்கு வருவது ஓபிஎஸ் தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் EVKS. இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுக சார்பில் ரவீந்திரநாத்தும் போட்டியிடுகின்றனர். தற்போது நேரடியானப்போட்டி அதிமுகவிற்கு, அமமுகவிற்கும் என்றும் பலரும் எதிர்பார்த்த நிலையில் அங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது, இந்த முறை போட்டி ரவிந்த்ரா நாத்திற்கும் காங்கிரஸ் கட்சியின் இளங்கோவனுக்கும் இருக்கும் என்றே கள எதார்த்தங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இதையும் படிக்க:  ராமலிங்கம் படுகொலையை கண்டித்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு 5 ஆயிரம் பேர் சேர்ந்து செய்த சத்தியம்

கடந்த காலத்தில் தேனி தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல்.

இன்றுவரை தங்க தமிழ் செல்வனை பலரும் அதிமுக காரராக தான் பார்க்கின்றனர், சமீபத்தில் ஒரு வயதான ஒரு பாட்டியிடம் தமிழ்செல்வன் வாக்கு சேகரித்த போது நீ போயா நா உனக்கு இரட்டை இலையில் வாக்கு அளிக்கிறேன் என்று சொன்னதும் உடைந்து போய்விட்டார் தமிழ் செல்வன்.

அந்த அளவு அங்கு சின்னம் மக்கள் மனதில் பதிந்துள்ளது.
எனவே பெரும்பாலான வாக்குகள் இரட்டை இலைக்குத்தான் கிடைக்கும் என்றும், அதனால் எளிதில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கடைசி நேரத்தில் மோடியின் வருகை, விட்டமின் ‘ப’ போன்றவை அதிமுகவின் வெற்றியை மேலும் உறுதி செய்யும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படிக்க:  ரஜினி அஜித் ரசிகர்களுக்கு இடையே கொளுத்திபோடு பரபரப்பாக இயங்கும் திமுக ஐடி செல்!

©TNNEWS24

Loading...