டெல்லி சென்று மோடி, அமிட்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் பதவியேற்க மே 29 நாள் குறிப்பு.

டெல்லி சென்று மோடி, அமிட்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் பதவியேற்க மே 29 நாள் குறிப்பு.

வாரணாசி.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது தொகுதியான வாரணாசியில் மனுதாக்கல் செய்கிறார், அதற்காக நேற்று வாரணாசி முழுவதும் பாதுகாப்பினை கருத்தில்கொள்ளாமல் தெருக்களில் வளம் வந்து வாக்குகளை சேகரித்தார் இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இதில் ஆச்சர்யப்படும் விதமாக தமிழகத்தின் துணை முதல்வரும், அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஆகிய பன்னீர் செல்வம் கலந்து கண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கட்சியில் ஓபிஎஸ் வளரக்கூடாது என்பதில் தினகரன் எந்த அளவு இடைஞ்சலை கொடுக்கிறாரோ அதே அளவு எடப்பாடி தரப்பும் மறைமுகமாக காய் நகர்த்துவதாக சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்த தேர்தலில் ஓபிஎஸ் மகனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சுமார் 75 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தினை வாரி இறைத்திருக்கிறது தினகரன் தரப்பு, அதுமட்டுமின்றி மோடியின் தேனி வருகையின் போது கூட்டத்தை கூட்டியதில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தவர் ஓபிஎஸ் ஆனால் அவரது மகனின் வெற்றி வாய்ப்பை குறைக்கும் நடவடிக்கைகளில் இருவரும் ஈடுபட்டிருப்பது ஓபிஎஸ் கவனத்திற்கு வந்திருக்கிறது.

இதையும் படிக்க:  அவளவுதான் உனக்கு TTV தினகரனுக்கு எச்சரிக்கை விடுத்த கருப்பு முருகானந்தம்.

மக்கள் மற்றும் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் இடையே ஓபிஎஸ் என்று தனியாக ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது அவர் எடப்பாடி அமைச்சரவையில் இணையாமல் இருந்திருந்தால் அவரது மதிப்பு உயர்ந்துகொண்டேதான் சென்றிருக்கும் நிலைமை இப்படி இருக்க, 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பில் கடும் வாக்குவாதமே நடைபெற்றிருக்கிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி வாய்ப்பில்லாத வேட்பாளரை தேர்வு செய்திருப்பதாக இப்போதே பலர் எடப்பாடியை குற்றம் சுமத்துகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் யாரும் வரக்கூடாது என்பதை மட்டுமே எடப்பாடி கவனத்தில் வைத்திருப்பதாகவும் இதனால் திமுக திருப்பரங்குன்றம் வேட்பாளர் சரவணன் எளிதாக வெற்றிபெற்றுவிடுவார் என்றே அதிமுகவினர் வேதனையில் உள்ளனர்.

மேலும் மோடியின் அறிவுரையின்படியே ஓபிஎஸ், எடப்பாடி அணியுடன் தனது அணியை இணைத்தார் ஆனால் அன்று முதல் அவருக்கு இறங்குமுகமாகவே இருப்பதாக அவரது ஆதரவாளர்களே வேதனை படுகின்றனர்.

இதையும் படிக்க:  ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யார் தமிழகம் வந்தாலும் கறுப்புக்கொடி காட்டுவேன் -அர்ஜுன் சம்பத் அதிரடி

அதற்கு இந்த முறை சரியான முறையில் காய் நகர்த்தியிருக்கிறார் பன்னீர் செல்வம். பலரும் மகனுக்கு மத்திய மந்திரி பதவி கேட்டு சென்றிருக்கிறார் என்றுசொல்லிக்கொண்டிருக்க நிலைமை தலைகீழாக இருக்கிறது, எப்படியும் இடைத்தேர்தல் முடிந்ததும் ஆளும் அரசிற்கு பாதிப்பு இருக்காதே என்றே அனைவரும் சொல்கின்றனர்.

இந்த சூழலில் தனக்கு மோடி கொடுத்த வாக்குறுதியை கங்கை கரையிலேயே வைத்து பேசி இருக்கிறார் பன்னீர் ஆளும் கட்சி மெஜாரிட்டி வந்ததுடன், மீண்டும் முதல்வராக பன்னீர் வருவார் என்றும் மே 29 -ம் தேதி இதற்காக நாள் குறித்துவிட்டார் என்றும் இப்போதே டெல்லி வட்டாரத்தில் பேச்சுக்கள் வரத்தொடங்கியுள்ளன.

அதனை மனதில்வைத்துக்கொண்டுதான் பன்னீர் செல்வம் அமைதியாக இருந்ததாகவும், வேட்பாளர் தேர்வில்கூட பொறுமையை கையாண்டார் என்றும் விளக்கமளிக்கின்றனர். மீண்டும் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும் என்றே பலரும் கணித்துள்ளனர்.

இதையும் படிக்க:  ஐயப்பன் கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்களை கிழித்து தொங்கவிட்ட இஸ்லாமியர் அக்பர் அலி!

இதற்கு இடையில் கங்கையில் வைத்து தனது அரசியல் ஆளுமையை பன்னீர் தொடங்கியிருப்பதாகவும், இனி அவருக்கு ஏறுமுகம்தான் என்று அவரது ஆதரவாளர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்கள் இரண்டு அமைச்சர்களை மோடியை தனியாக சந்திக்க அனுமதி கேட்டும் பாஜக மறுத்துவிட்டது என்பது கூடுதல் செய்தி.

அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...