இந்தியா குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமத் திமிர் பேச்சு

நாங்கள் கோப்பையை வெல்கிறோமோ இல்லையோ ஆனால் நிச்சையம் இந்தியாவை தோற்கடிப்போம் – சர்ப்ராஸ் அஹமது

உலக கோப்பை கிரிக்கெட் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கவுள்ளது அதில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

அதற்கான உலக கோப்பை விளையாடும் தங்கள் அணிகளை ஒவ்வொரு நாடாக அறிவித்துவருகின்றனர் , இதுவரை இந்தியா உட்பட 7 நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷ்ரபிராஸ் அஹமது நாங்கள் உலககோப்பைக்கு முழுமையாக தயாராக இருக்கிறோம்.

எங்களின் ஒரே எதிரி இந்தியா தான் , நாங்கள் கோப்பையை வெல்கிறோமோ இல்லையோ ஆனால் நிச்சயம் இந்தியாவை தோற்கடிப்போம்.

இதையும் படிக்க:  எங்களிடம் வாங்கிய நிலத்தை திருப்பி கொடு இல்லையேல் இத்தாலிக்கே ஓடு ராகுல் காந்தியை விரட்டிய விவசாயிகள் !

கடந்தமுறை சாம்பியன்ஸ் ட்ராபி இருதிபோட்டியில் நாங்கள் இந்தியாவை சந்தித்தபோது இந்தியாதான் வெல்லும் என்று அனைவரும் சொன்னார்கள் ஆனால் அவர்கள் அடித்து மண்ணை கவ்வ வைத்தோம்.

இந்த உலகக்கோப்பை போட்டியிலும் நாங்கள் அதையே செய்வோம் , இந்தியா ஒரு பலமான அணி அந்த அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற பேச்சு உள்ளது.

அது அவர்களின்மீது அதிக அழுத்தத்தை தரும் ஆனால் எங்கள் மீது அப்படிபட்ட பேச்சு இல்லாததால் நாங்கள் சுமையின்றி ஆடுவோம்.

என்று அவர் அந்த பேட்டியில் கூறினார் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சர்ப்ராஸ் அஹமத் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடுப்பேத்தும் விதமாக பேசியிருப்பது சமூகவலைத்தளங்களில் பாக்கிஸ்தான், இந்திய தரப்பு மக்களிடையே வாக்குவாதத்தை உண்டாகியுள்ளது.

இதையும் படிக்க:  கட்டப்பா போன்று முதுகில் குத்தும் பழக்கம் கொண்டவர்கள் பாகிஸ்தானியர்கள் இம்ரான் கான் வேண்டுகோளுக்கு சுஷ்மா பதில்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...