பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை. முதல் கட்டத்தில் யார் முந்துவது.

சமூகவலைத்தளம்.,

பிரபல பத்திரிகையாளர் பாண்டே, தனது சாணக்யா டிஜிட்டல் தொலைக்காட்சியில் தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்று பிரமாண்ட கருத்து கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதில் முக்கியமாக பார்க்கப்படுவது முக்கிய ஊடகங்களில் அல்லாமல் சமூகவலைத்தளங்களில் பாண்டே வெளியிடப்படும் கருத்து கணிப்பு ஒன்று- 12000 நபர்களை சந்தித்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக 8 -நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முடிவுகளை வெளியிட்டார் பாண்டே அதில் திருவள்ளூர், தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஸ்ரீ பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் நட்சித்திர வேட்பாளர்களாக பார்க்கப்படுவது திமுக சார்பில் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜெகத் ரட்சகன் அதிமுக சார்பில் – k.P. முனுசாமி ஜெகத் ரட்சகன், சாம்பால்.

இதையும் படிக்க:  தமிழகத்தில் எத்தனை தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் கைப்பற்றும் தேர்தலுக்கு பின்பான நிலவரம்?

ஸ்ரீபெரும்புதூர் நிலவரம்

Credit – சாணக்யா

இங்கு திமுக கூட்டணியே வெற்றிபெறும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் T.R பாலு வெற்றிபெறுவார் என்று சாணக்யா சொல்லி இருக்கிறது.

மத்தியசென்னை.

மத்திய சென்னையை பொறுத்தமட்டில் திமுக, பாமக இடையே கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், இங்கு தயாநிதி மாறன் வெற்றி பெறுவார் என்று சாணக்யா சொல்லி இருக்கிறது.

திருவள்ளூர் (தனி )

திருவள்ளூர் தொகுதியை பொறுத்தமட்டில் இங்கு அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியை கைப்பற்றும் என்றும் பாண்டே கூறி இருக்கிறார்.

அரக்கோணம்.

அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதி என்பதாலும் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது, இங்கு திமுகவின் ஜெகத் ரட்சகனே வெற்றிபெறுவார் என்று chanakyaa சொல்லி இருக்கிறது.

இதையும் படிக்க:  ஸ்டாலின் எப்படி துணை முதல்வர் ஆனார்.. திருமாவளவன் நாட்டிற்கே தேவையில்லை வெளுத்து வாங்கிய ராமதாஸ்

தென் சென்னை

இந்த தொகுதி அதிகமுறை அதிமுகவிற்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்படுகிறது இங்கு தமிழச்சி தங்கபாண்டியனும், தற்போதைய M.P ஜெயவர்தனும் களத்தில் சந்திக்கின்றனர். இங்கு தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றிபெறுவார் என்று சாணக்யா சொல்லி இருக்கிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தொகுதியை பொறுத்தமட்டில் இங்கு முன்னாள் அமைச்சர் கிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் சார்பில் இளைஞர் காங்கிரஸ் செல்வகுமார் போட்டியிடுகின்றனர். இங்கு அதிமுக 2 வாக்குகள் வித்தியாசத்தில் முந்துவதாகவும், ஆனால் இந்த தொகுதி இழுபறியான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வடசென்னை.

வடசென்னை தொகுதியை இந்த முறை திமுக கைப்பற்றும் என்றே சொல்லி இருக்கிறார்கள்.

காஞ்சிபுரம்

இந்த முறை காஞ்சிபுரம் தொகுதியில் தற்போதைய M.P மரகதம் குமரவேல் மற்றும் இவரை எதிர்த்து சென்ற தேர்தலில் களம் இறங்கிய திமுக வேட்பாளரே களம் காண்கிறார். இந்தமுறை இங்கு திமுகவே வெற்றி பெரும் என்று சாணக்யா கணித்துள்ளது.

இதையும் படிக்க:  பதிவான வாக்குகள் யாருக்கு வெற்றியை தேடித்தரும்? தினகரன், கமல், சீமான் வெற்றிவாய்ப்பு எப்படி பாண்டே வெளியிட்ட புது கணிப்பு.

உடனுக்குடன் அனைத்து தேர்தல் கருத்து கணிப்புகள் மற்றும் செய்திகளை அறிய நமது TNNEWS24 (@NEWSTN24) உடன் இணைந்திருங்கள்.

Source – சாணக்யா

G.C credit – chankyaa

Loading...