அமைதியாக இருப்பதனால் விளையாடுகிறீர்களா ஸ்டாலின் வீரமணிக்கு பாண்டே கேள்வி இணையத்தில் பெருகும் ஆதரவு

அமைதியாக இருப்பதனால் விளையாடுகிறீர்களா ஸ்டாலின் வீரமணிக்கு பாண்டே கேள்வி இணையத்தில் பெருகும் ஆதரவு

சென்னை.,

இந்துக்களின் கடவுள் கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுடன் இணைத்து திராவிட கழகத்தலைவர் வீரமணி பேசியது இந்துக்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நேற்று பலரும் வீரமணி பங்கேற்ற திருச்சி கூட்டத்தில் இந்து அமைப்புகள் வெளிப்படுத்திய கோபத்தை ஆதரித்தே கருத்துக்களை சொல்லிவருவதை பார்க்கமுடிகிறது.

இந்நிலையில் சாணக்யா சேனலின் நிறுவனர் பாண்டே இன்று தனது டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் மிகவும் அமைதியான முறையில் தனது கேள்விகளை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஏன் தொடர்ந்து இந்துமதத்தை மட்டும் அநாகரிகமாக விமர்சனம் செய்ய என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க:  சமரச முயற்சி தோல்வி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகிறார் கண்ணப்பன்?

இந்துக்கள் அமைதியாக இருப்பதனால் இப்படி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் அதற்கு உங்களுக்கு சட்டமும் வலுவாக இல்லாததால் தப்பி பிழைக்கிறீர்கள் என்று சொல்லி இருந்தார்.

மேலும் 6 வயது கிருஷ்ணன் உடைகளை எடுத்தது தவறென்றால்.

  • மகள் வயது பெண்ணை, குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்வது
  • மூன்று பொண்டாட்டிகள் காட்டிக்கொள்வது உங்கள் பாஷையில் தவறாக தெரியவில்லையே ஏன் இப்படி ஒரு மதத்தினை மட்டும் எதிர்க்கிறீர்கள்.

ஸ்டாலின் அவர்களே நீங்கள் நயன்தாரா குறித்து பேசியதற்காக ராதாரவியை இடைநீக்கம் செய்திருக்கிறீர்கள் இதே இந்துக்கடவுள்களை அவமானப்படுத்தி பேசி இருக்கும் வீரமணியின் அறிக்கைக்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று எங்காவது சொல்லி இருக்கிறீர்களா?

அப்படி என்றால் நீங்கள் இதனை ஆதரப்பிதாகதானே பொருள்தரும் என்று அமைதியான முறையில் தனது கேள்விகளின் மூலம் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

இதையும் படிக்க:  சிவகங்கை தொகுதியை தவிர்த்து வேட்பாளர்களை அறிவித்தது காங். ராஜாவை எதிர்கொள்ள பயப்பிடுகிறதா காங்கிரஸ்.

பாண்டே கருத்திற்கு இடது சாரிகள், திமுகவினர் குற்றம் சுமத்திவரும் நிலையில் பலரும் அவருடைய கருத்திற்கு ஆதரவாக திமுக, வீரமணியை நோக்கி கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

முதல்முறையாக ஒரு பத்திரிகையாளர் இப்படி தமிழகத்தில் கேள்வி கேட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டே கேள்விக்கு பதில் கிடைக்குமா?

©TNNEWS24

Loading...