நேற்று பாண்டே அடித்த அடி பம்மிக்கொண்டு வழிக்கு வந்த ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை இப்போ தெரியுதா?

நேற்று பாண்டே அடித்த அடி பம்மிக்கொண்டு வழிக்கு வந்த ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை இப்போ தெரியுதா?

சென்னை.,

நேற்று தனது சாணக்யா டிஜிட்டல் தொலைக்காட்சியில் பாண்டே வீரமணி, மற்றும் ஸ்டாலினை நோக்கி சில கேள்விகளை கேட்டிருந்தார், அவற்றில் முக்கியமானது கிருஷ்ணர் குறித்து வீரமணி பேசியதை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை என்றும் அதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

இந்துக்களுக்கு எதிரி இல்லை என்று சொல்லும் நீங்கள் ஏன் இப்படி கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறீர்கள் என்றும் வீரமணியிடம் இந்துக்கள் அமைதியாக இருப்பதால் அவர்களை சீண்டி பார்க்கிறீர்களா என்றும் மிகவும் அமைதியானமுறையில், தெளிவாக தனது கேள்விகளை வைத்திருந்தார் பாண்டே.

அதனை நாமும் நேற்று செய்தியாக வெளியிட்டிருந்தோம், தற்போது அதன் தாக்கம் இணையத்தில் அதிகம் எதிரொலிக்க தொடங்கியது, பலரும் பாண்டே எழுப்பிய கேள்விகளை முன்வைத்து ஸ்டாலின், வீரமணியை நோக்கி கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:  காங்கிரஸ் ஆதரவு தேசிய ஊடகமே கருத்து கணிப்பில் சொல்லிருச்சு தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றி மோடி பிரதமர் ஆகிறார் ! திமுக அதிமுக பெரும் இடங்கள் எத்தனை?

பலர் தாங்கள் கிருஷ்ணரை வணங்குபவர்கள், வீரமணி பேச்சை கண்டிக்காத யாரும் எங்கள் பகுதியில் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்று தங்கள் வீட்டு வாசலில் போஸ்டர் ஓட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக ‘ANI’ நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் முன்பெல்லாம் இது பெரியார் மண், பெரியார் மண் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் ஸ்டாலின், என் மனைவி தினமும் காலை, மாலை கோவிலுக்கு செல்பவர் என்று ஆன்மீகவாதி அளவிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அத்துடன் வீரமணி அந்த நோக்கத்தில் பேசி இருக்கமாட்டார், பேசி இருந்தால் தவறு என்றும் சொல்லி இருக்கிறார். இங்குதான் நாம் ஒன்றை பார்க்கவேண்டும் வீரமணியை ஸ்டாலின் கண்டிக்கும் அளவிற்கு இந்துக்களின் ஒற்றுமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க:  இந்த இரண்டையும் செய்தால் பரிசீலிக்கலாம் ஸ்டாலினிடம் விஜயகாந்த் வைத்த நிபந்தனை

மேலும் வீரமணி மீது செருப்பு வீசியதற்கோ, இல்லை திராவிட கழகத்தினரை அடித்ததை பற்றியோ ஸ்டாலின் வாயே திறக்கவில்லை, அழுத்தம் திருத்தமாக கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

மேலும் இதுபோல் இனி இந்துக்கள் குறித்து யாராவது பேசினால் அப்போதே பதிலடி கொடுக்கவேண்டும் என்றும் அப்போதுதான் தமிழகத்தில் இனி யாரும் இந்து தெய்வங்கள் குறித்து அவதூறாக பேசமாட்டார்கள் என்றும் பலரும் கருதுகின்றனர்.

தமிழகத்தில் இனி அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இந்துக்கள் வாக்கு வங்கியே இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

©TNNEWS24

Loading...