பாண்டே மற்றும் TNNEWS24 இணையதளத்தை கடுமையாக கண்டித்த வீரமணி காரணம் என்ன?

TNNEWS24 இணையதளத்தை பாண்டே இயக்குகிறாரா வீரமணியின் மிரட்டலுக்கு எங்களது பதில்.

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தளத்தில் பெரியாரிஸ்ட்களுக்கும் வலது சாரிய சிந்தனை கொண்ட நபர்களுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக கருத்து மோதல் நடை பெற்று வருகிறது பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கினார்களா இல்லையா என்ற விவாதம் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

jeganath srinivasan எனும் நபர் தனது facebook பக்கத்தில் பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுக்கவில்லை, போலியாக பெரியாரிஸ்ட்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறியதுடன் தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்து விக்கிபீடியா பக்கத்தில் இருந்து அந்த தகவலை நீக்கி இருந்தார்.

அந்த தகவலை எங்களது TNNEWS24.com இணையத்தளத்தில் செய்தியாக march 29 அன்று வெளியிட்டிருந்தோம் (அது report செய்து நீக்கப்பட்டது ) http://tnnews24.com/periyarist-fake-news/

இதையும் படிக்க:  இந்தியன் வேறு தமிழன் வேறு என்று பிரித்த பிரிவினைவாதிகளுக்கு சம்பட்டி அடி கொடுத்த தமிழர்கள் லட்சக்கணக்கில் ஒன்று சேர்ந்து அஞ்சலி

அதனை தொடர்ந்து நேற்று திராவிட கழகத்தின் அதிகாரபூர்வ விடுதலை பத்திரிகையில் திராவிட கழக தலைவர் வீரமணியின் அறிக்கையை வெளியிட்டிருந்தனர், அதில் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் கொடுத்த தகவல் தவறு என்றும் விரைவில் நிரூபிப்போம் என்றும் சவால் விட்டுருந்தார் வீரமணி. ஆனால் மீண்டும் jeganath srinivasan தான் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரி என்றும் அதற்கான அனைத்து ஆதாரங்களையும் விடுதலை நாளிதழில் கீழ் பக்கத்தில் கமெண்ட் செய்திருந்தார் அதனையும் நீக்கிவிட்டார்கள்.

மேலும் நமது TNNEWS24.com இணையதளத்தை தந்தி டிவியில் இருந்து வெளியேறிய பார்ப்பனர் இயக்குவதாக மூத்த செய்தியாளர் பாண்டே பெயரை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு நாங்கள் பதில் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்களது இணையதளத்திற்கு பாண்டே அவர்களுக்கும் தொடர்பு இல்லை. மேலும் பாண்டே அதிகாரபூர்வமாக chanakyaa தொலைக்காட்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் உள்ளார். எனவே நீங்கள் தெரிவித்த கருத்து தவறு. இது (TNNEWS24) இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்களால் நடத்தப்படும் இணைய தளம்.

இதையும் படிக்க:  அட்ராசக்க பாண்டே விவாத நிகழ்ச்சியில் வரப்போகிறார் ! மீண்டும் பழைய பாண்டேவாக சூடான விவாதம் தயார் !

நீங்கள் பெரியாருக்கு விருது வழங்கியதாக தவறான தகவல் அளித்து தமிழக மக்களை இத்தனை வருடங்களாக ஏமாற்றி வந்திருப்பது தற்போது வரை நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலில் அடுத்தவர்களின் சாதியை ஆராய்வதை விட்டுவிட்டு அவர்களின் குற்றச்சாட்டிற்கு பதில்சொல்லுங்கள் இல்லை என்றால் பொதுமக்கள் முன்னிலையில் பொய் தகவலை அளித்ததற்கு நிபந்தனை அற்ற மன்னிப்பை கேளுங்கள் பெரியாரிஸ்ட்களே !

பின் குறிப்பு இந்த இணையதளத்தை இயக்குவது பார்ப்பனர் அல்ல.

இது போன்ற எந்த மிரட்டலுக்கும் போன் கால்களுக்கும் எங்கள் இணையதளம் கொள்கையை மாற்றி கொள்ளாது

என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  இப்போ தெரியுதா தந்தி டிவி -ல் இருந்து பாண்டே ஏன் வெளியேறினார் என்று ?
Loading...