அய்யாக்கண்ணு வரிசையில் இணைந்த பனிமலர் திட்டிதீற்கும் திமுகவினர்.

அய்யாக்கண்ணு வரிசையில் இணைந்த பனிமலர் திட்டிதீற்கும் திமுகவினர்.

காரைக்குடி.,

சமூகவலைத்தள காலத்தில் திடீரென ஒருவரை உயர்த்திப்பிடிப்பதும் அதே வேகத்தில் அவரை விமர்சனம் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பாஜக தலைவர் அமிட்ஷாவை சந்தித்து மோடிக்கு எதிராக விவசாயிகள் போட்டியிடும் திட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார், அவ்வளவுதான் அதே வேகத்தில் தற்போது எந்த திமுக மற்றும் அதன் கூட்டணி தரப்பினர் அய்யாக்கண்ணுவை வானளவு புகழ்ந்தார்களோ இன்று அவர்களே அய்யாக்கண்ணு ஒரு பாஜக கைக்கூலி என்றும், பணத்திற்கு விலைபோய்விட்டார் என்னும் அளவிற்கு விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் பெரியாரிய கொள்கை கொண்ட பனிமலர் இன்று எதிர்கட்சிகளை சேர்ந்த சமூகவலைத்தள நபர்களால் அதிகம் விமர்சனம் செய்யபடுகிறார், அதற்கு காரணம் அவர் பாஜக தேசிய செயலாளர், H ராஜாவுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதுதான்.

இதையும் படிக்க:  இப்படி அசிங்கப்படுவோம்னு கனவுலயும் கார்த்தி நினைச்சிருக்க மாட்டாரு

தனது நிகழ்ச்சி ஒன்றிற்காக காரைக்குடியில் ராஜாவினை பேட்டி எடுக்க காரைக்குடி செல்லும்போது அங்கு எடுத்த புகை படத்தினை சிலர் தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர், மேலும் அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் H ராஜாவிற்கு சாதகமாக இந்து ஓட்டுக்களை இணைந்துவிடும் என்றும், இப்போது திமுகவினர் எப்படி எந்த மதத்தினையும் விமர்சிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள், அதுபோல் பணிமலரும் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

அதாவது பழைய விவகாரங்களை தோண்டினால் அது ராஜாவிற்கு சாதகமாக இந்து ஓட்டுகள் திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் இதுபோன்ற கேள்விகளை தவிர்க்கும்படி பயத்தில் அவ்வாறு பதிவிட்டிருக்கின்றனர்

இன்னும் ஒரு சிலரோ இப்போது பெரியார் பெயரைக்கூட சேர்க்கவேண்டாம் அதனை தேர்தல் முடிந்தப பிறகு பார்த்துக்கொள்ளலாம் இல்லை என்றால் இந்துக்கள் ஓட்டு கிடைக்காது என வெளிப்படையாக அந்த விடீயோவிற்கு கீழே பதில் அளித்துள்ளனர்.

இதையும் படிக்க:  ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அதே இடம் அதே மேடை தமிழகம் வருகிறார் மோடி !

தற்போது அய்யாக்கண்ணு வரிசையில் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலாக பனிமலர் நிலைமை ஆகிவிட்டது.

ஒரு சிலர் புகைப்படத்தினை மட்டும் பார்த்துவிட்டு பனிமலர் பாஜகவில் இணைந்துவிட்டதாக திட்டி தீர்க்கின்றனர்.

திமுகவினரே பெரியாரிஸ்ட்களை ஏற்று கொள்ளவில்லை என்றால் இனி பெரியாரிஸ்ட்கள் நிலைமை என்னவாகும் என தெரியவில்லையே?

©TNNEWS24

Loading...