அம்பலப்பட்ட ஆதாரம் மூடி மறைக்கும் ஊடகங்கள் விஸ்வரூபம் எடுக்கும் வீரமணி சர்ச்சை !

சமூகவலைத்தளம்.,

ஊடகங்கள் வெளியில் சொல்லாத மர்மத்தை உடைத்திருக்கிறார் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்னும் நபர் இதுகுறித்து மார்ச் மாதம் 28 – ம் தேதி அவரது facebook பக்கத்தில் பதிந்த பதிவை உங்கள் TNNEWS24 இணையத்தில் மார்ச் 29 அன்று செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

அதில் UNESCO நிறுவனம் பெரியாருக்கு எந்த விருதும் வழங்கவில்லை என்றும் UNESCO விருது பட்டியலில் பெரியாரின் பெயரே இல்லை என்றும் குறிப்பிட்டு ஆதாரத்தை விக்கிபீடியா நிர்வாகத்திற்கு அனுப்பியிருந்தார், அதனை மேற்கோள் காட்டி நிர்வாகமும் அந்த பதிவை நீக்கியிருந்தது.

இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றிய திராவிட கழகத்தை சேர்ந்த அதன் தலைவர் வீரமணி, ஆதாரங்களை அளித்த ஜெகநாத் ஸ்ரீனிவாசனை பார்ப்பனர் என்றும், TNNEWS24 இணையத்தை இலங்கையில் இருந்து வெளியாகும் இந்துத்துவ இணையதளம் என்றும் கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டதுடன் இந்த இணையத்தை பாண்டே இயங்குவதாகவும் குற்றம் சுமத்தி இருந்தார். மேலும் விரைவில் பெரியாருக்கு விருது வழங்கப்பட்டதை நிரூபிப்பேன் என்றும் சவால் விட்டிருந்தார்.

இதையும் படிக்க:  தோனியை நினைத்து பயமா? போட்டி முடிந்ததும் ரோஹித் சொல்லிய பதில் என்ன !

ஆனால் மீண்டும் ஜெகநாதன் தன்னிடம் உள்ள ஆதரங்களுடன் வீரமணியின் பதிவிற்கு கீழே வெளியிட அதனை நீக்கியத்துடன் வீரமணி அவர்கள் பெயரில் வெளியான அறிக்கையையும் நீக்கிவிட்டார்கள். ஆனால் விடுதலை நாளிதழில் அதிகார பூர்வ பக்கத்தில் மட்டும் இந்த தகவல் உள்ளது.

இதனை தொடர்ந்து பலரும் வீரமணி மற்றும் பெரியார் இயக்கங்களுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், இல்லாத ஒரு தகவலை மக்களுக்கு சொன்னது மட்டுமல்லாமல் அப்போதைய முதல்வரை அழைத்து போலியாக விருதும் கொடுத்திருக்கிறார்களா என்றும் இதுகுறித்து ஊடகங்களும் உண்மையை மக்கள் மத்தியில் தெரிவிக்காமல் அமைதி காப்பது மிகப்பெரிய கேவலத்தை ஊடகங்களின் தரத்திற்கு உகந்தது அல்ல என்றும் கொந்தளித்துள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் இது ஒன்றும் ஓசி சோறு விவகாரமல்ல பொய் சொல்ல என்றும் எதற்கெடுத்தாலும் வாய்திறக்கும் பெரியாரிஸ்ட்கள் இந்த வயதிலும் பெரியாரை திருமணம் செய்துகொள்வேன் என்ற பனிமலர் போன்றோர் இதற்கு பதில் சொல்லவேண்டும் என்றும், ஊடகங்கள் விவாதம் நடத்தவேண்டும் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிக்க:  ஏய் உட்கருய்யா அதகளப்பட்ட மேடை ! அது என்ன அவளோ பெரிய கெட்ட வார்த்தையா? நா தமிழன் நீ தமிழனா பந்தாடிய கரு நாகராஜ்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...