தீவிரவாதிகளுக்கு முட்டு கொடுக்காதீர்கள் வெட்கமாக இருக்கிறது வெளுத்து வாங்கிய பிஜே பதில்சொல்வாரா ஷாநவாஸ்.

தீவிரவாதிகளுக்கு முட்டு கொடுக்காதீர்கள் வெட்கமாக இருக்கிறது வெளுத்து வாங்கிய பிஜே பதில்சொல்வாரா ஷாநவாஸ்.

தொண்டி.,

பிஜே என்று அழைக்கப்படும் பி ஜைனுல் ஆப்தீன் இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து பேசிய பேச்சுக்கள் இணையத்தில் அதிகம் உலாவர தொடங்கியுள்ளன, அவரது கருத்துடன் முரண்படும் பலரும் பிஜே- யின் கருத்தினை வரவேற்றுள்ளனர்.

தமிழ்நாடு ஜவஹித் ஜமாத் நிறுவனர் பிஜே தனது வலைத்தளத்தில் இலங்கையில் குண்டு வைத்தது இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் தீவிரவாதிகள் என்றும், அவர்கள் முஸ்லிம்க்கு பிறந்தவர்கள்தான் என்றும் உறுதியாகிவிட்டது, இனிமேலும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளுக்கு முட்டு கொடுக்கவேண்டாம் அவ்வாறு செய்தால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஆகும்.

நியூசிலாந்தில் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்ட போது அந்த அரசாங்கமும், அந்நாட்டு மக்களும் நமக்கு ஆறுதல் சொன்னார்கள் ஆனால் நாம் இப்போது தீவிரவாதிகளுக்கு முட்டுக்கொடுத்து நமது மதிப்பை கெடுத்துக்கொள்வது வேண்டாம் என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க:  நீ முஸ்லீம் இல்லை தலித் உகண்டா சென்ற ஷா நவாஸ் இஸ்லாமியர்களிடம் சிக்கி படும் பாடு காப்பாத்துவாரா திருமா, குரல்கொடுப்பார்களா கம்யூனிஸ்ட்கள்

மேலும் குண்டுவெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் குறித்து இலங்கை அரசிற்கும், ஊடகங்களுக்கும் தெரியாத தகவல்கள் தனக்கு தெரியும் என்றும் அதனை வெளிபடுத்தப்போவதாகவும் கூறியிருக்கிறார் பிஜே. அமீர் போன்ற மக்கள் மத்தியில் தங்களை நடுநிலையாளர்களாக காட்டிக்கொள்ளும் நபர்கள் கூட இஸ்லாமியர்கள் இதனை செய்தார்களா இல்லையா என வெளிப்படுத்தாமல் தங்கள் மத உணர்வை வெளிக்காட்டினர் என்பதும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைத்து சமூக மக்களுக்கான பேச்சாளராக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும், ஷா நவாஸ் போன்றோர் இதுவரை இலங்கையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதிகளை கண்டிக்கவில்லை, எதற்கெடுத்தாலும் RSS, பாஜக மீது மட்டுமே குற்றம் சுமத்தும் இவர்களை போன்றோர் தீவிரவாதம் குறித்து வாய் திறக்காமல் இருப்பது உலக தமிழர்கள் மத்தியில் இவர்களின் உண்மை முகத்தினை வெளிப்படுத்தும் விதமாகவும் இருப்பதாக பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:  வெளிவந்த உண்மை எப்போ சாக போறீங்க ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் ஓடி ஒழியும் ஷா நவாஸ்.

மதவாதியான பிஜே போன்றவர்களே இலங்கை தீவிரவாத தாக்குதலை கண்டித்து முட்டு கொடுக்காதீர்கள் வெட்கமாக இருக்கிறது என்று கூறும்போது, ஷாநவாஸ் போன்றோர் இனிமேலாவது வாய் திறப்பார்களா?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...