அரக்கோணத்தில் அடித்து ஓடவிடப்பட்ட திமுக மேடை பேச்சாளர் யார் என்று தெரிகிறதா?

அரக்கோணத்தில் அடித்து ஓடவிடப்பட்ட திமுக மேடை பேச்சாளர் யார் என்று தெரிகிறதா?

அரக்கோணம்.,

அரக்கோணம் நாடாளுமன்றம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்விஷாரம்புரத்தில் துணை ராணுவ படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி தற்போது பாமக மற்றும் திமுகவினர் இடையே நடந்த மோதலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதற்கு முக்கியமாக காரணமாக அமைந்தது பாமக கட்சிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களை திமுகவை சேர்ந்த பூத் ஏஜென்ட் நேரம் ஆகிவிட்டதால் அனுமதிக்க கூடாது என்று தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் 6 மணிக்குள் வந்துவிட்டதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க வேண்டும் என்று பாமகவினர் சொல்ல அந்த பூத் ஏஜென்ட் தொடர்ந்து தகாத வார்த்தையில் பேச பாமகவினர் அந்த திமுக பூத் ஏஜெண்டை வெளுத்து எடுத்தனர், அவர் கதறி கொண்டு துணை ராணுவப்படையினரிடம் ஓடினார் அப்போது அங்கிருந்த வாகனத்தில் ஏற்றி அவரை துணை ராணுவப்படையினர் பாதுகாத்தனர்.

இதையும் படிக்க:  சென்ற முறை முடிவுகளை சரியாக கணித்த ஒரே நிறுவனம் NEWS24-சாணக்யா இந்த முறை மாநில வாரியாக முடிவுகளை தெரிவித்துள்ளது.

இப்படி பாமக கட்சியினரிடம் அடிவாங்கிய நபர் வேறுயாருமல்ல சிறிது நாட்களுக்கு முன்னர் வலைத்தளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவியது அதில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா ஆகியோர் குறித்து மிகவும் மோசமான முறையில் பேசிய நபர்தான் அந்த திமுக பூத் ஏஜென்ட்.

அவர் அடிவாங்கி ஓடியபோது அருகில் இருந்த திமுகவினர் தடுக்காமல் சிதறி ஓடினர், மேலும் பலரும் வாயை கொடுத்தால் தர்ம அடி கிடைக்காமல் என்ன கிடைக்கும் என்று அவரை பார்த்து பேசியது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.

©TNNEWS24

Loading...