புதுச்சேரி தொகுதியை கைப்பற்றப்போவது யார் ?

புதுச்சேரி.,

புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம் அதில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,ஒரு பாராளுமன்ற தொகுதி உள்ளது.

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றப்போவது யார் ? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது அதே சமயத்தில் அதிமுக கூட்டணியில் இந்த தொகுதியில் என். ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சி களம் காண்கிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் வி.வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார், என்ஆர் காங்கிரஸ் சார்பில் டாக்டர் கே நாராயணசாமி போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது ஆளும் காங்கிரஸ் கட்சி மேல் கடும் அதிருப்தி நிலவுகிறது, அது என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழலை உருவாகியுள்ளது.

இதையும் படிக்க:  பாமகவை வீழ்த்த எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்யத்தயார் என்ற பச்சமுத்து சீட் கொடுத்து அன்புமணியை வீழ்த்த திட்டம் .

என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமிக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது, அந்த செல்வாக்கும் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளதால்,

புதுச்சேரி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அதனால் இதே நிலையில் சென்றால் பாஜக கூட்டணிக்கு புதுச்சேரி தொகுதி கிடைப்பது உறுதியாகிவிடும்.

பாமக கூட்டணியில் இருப்பதும் இங்கு மிகப்பெரிய பலத்தினை என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெற்று தருகிறது. அதே நேரத்தில் களத்தில் காங்கிரஸ் கட்சியும் வலுவான போட்டியினை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...