பரபரப்பு !பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமான இருவர் சிக்கினர் எப்படி தெரியுமா?

பொன்னமராவதி சாதி கலவரத்திற்கு காரணமான ஆடியோ வெளியிட்ட இருவரும் எப்படி சிக்கினர் தெரியுமா?

சிங்கம்புணரி.,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பொன்னமராவதி கிராமத்தில் வசிக்கும் ஒரு சாதியை சேர்ந்த பெண்கள் மற்றும் அவர்களதுசாதியை குறித்து இருவர் மிகவும் தரைகுறைவாக பேசிய ஆடியோ சமீபத்தில் வாட்சப்பில் பரவியது.

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மிகவும் பதற்றம் அடைந்தது, ஆடியோ வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி மிகவும் போராட்டம் தீவிரமடைந்தது, அதனை தொடர்ந்து பல்வேறு பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார் இந்த ஆடியோவை வெளியிட்டது சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது, இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து சென்னை வரவழைக்கபட்ட செல்வகுமாரிடமும் (25), அவருக்கு உதவிய வசந்திடமும்(27) போலீசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து அவர்களை கைது செய்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:  திருச்சி தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

இவர்கள் இருவரை பிடிக்க 11 தனிப்படை அமைக்கப்பட்டது என்பதும், கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸாப் தலைமை அலுவலகத்திற்கே காவல்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று திரும்பியதும் அதன் மூலம் ஆடியோ வெளியிட்ட இருவரின் குரல் மாதிரிகளையும் ஆராய்ந்து இவர்கள் இருவரையும் தமிழக போலீசார் பிடித்திருக்கிறார்கள்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...