அதெல்லாம் இருக்கட்டும் இங்க வா உதயநிதிக்கு பார்சல் கொடுத்த பிரபாகரன்.

அதெல்லாம் இருக்கட்டும் இங்க வா உதயநிதிக்கு பார்சல் கொடுத்த பிரபாகரன்.

விருதுநகர்.,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் பிரச்சாரங்களில் ஈடுபடாமல் தவிர்த்து வரும் நிலையில் கட்சியின் பொருளாளர் பிரேமதாலதாவும், விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று விருதுநகர் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார், பிரபாகரன் அப்போது எங்களது பூர்வீக தொகுதி விருதுநகர் எனவேதான் விருதுநகர் தொகுதியை கேட்டு பெற்றதாக பிரபாகரன் கூறினார்.

எனக்கு தெரிந்த அரசியல் தலைவர்களில் நமது தலைவர் கேப்டனை தவிர வேற யாரும் ஈழ தமிழர்கள் மீது அக்கறையா இருந்தார்களா என்று தெரியவில்லை, ஏனென்றால் பிரபாகரன் பெயரை எனக்கு வைத்து நம்பிக்கை காட்டினார்.

இதையும் படிக்க:  எனக்கு பெரிய பெரிய கட்அவுட் களும் குடம் குடமாக பாலபிசேகமும் செய்யுங்கள் தன் ரசிகர்களுக்கு சிம்பு அன்பு கட்டளை

ஒரு சிலர் அவர்கள் பெயரை சொல்லி ஊரை ஏமாற்றி கொள்ளை அடித்து வருகிறார்கள், இனியாவது தமிழர்களின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்யாமல் அவர்களை நிம்மதியாக வாழ வழி செய்தால் போதுமானது.

உதயநிதி போகும் இடமெல்லாம் எல்லாருக்கும் சவால் விடுகிறார், 8 வழி சாலை குறித்து நேரடியாக விவாதிக்க தயாரா என்று கேள்வி கேட்கிறார். அதையும் துண்டு சீட்டை பார்த்து யாரோ எழுதி கொடுத்ததை தான் இவரும் இவருடைய தந்தை போல வாசிச்சிருப்பார்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் இலங்கையில் லட்சம் தமிழர்களின் மரணம் குறித்து விவாதம் நடத்த தயாரா நேரடியாக இருவரும் பேசி பார்க்கலாம் அப்பறம் அன்புமணிக்கு நீ சவால் விடலாம் என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

இதையும் படிக்க:  ஒருகாலத்தில் நம்மை அடக்கி ஆண்டவன் இன்று நமக்கு சல்யூட் அடிக்க காரணம் பாஜக அரசு தான் - ஜே கே ரித்தீஷ்.

உதயநிதி அன்புமணிக்கு பெட்டி பார்சல் என்று சொல்லியதுபோல் பிரபாகரன் உனக்கும் ஒரு பார்சல் என்று முடித்துள்ளார்.

எல்லாத்துக்கும் பதில் சொல்ற 4 – ம் கலைஞர் இதுக்கு பதில் சொல்லுவாரா?

©TNNEWS24

Loading...