கடும் கோபத்தில் துரைமுருகன். ஏன் ஸ்டாலின் பிரசன்னாவை விரட்டிவிட்டார் இப்போ தெரியுதா ?

கடும் கோபத்தில் துரைமுருகன். ஏன் ஸ்டாலின் பிரசன்னாவை விரட்டிவிட்டார் இப்போ தெரியுதா ?

திமுக பேச்சாளர் மற்றும் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர்தான் பிரசன்னா, எப்போதும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் மேடை பேச்சுகளிலும் சரி கொஞ்சம் அதிகமான சத்தத்துடன் கோபமாக பேசக்கூடியவர்.

திமுகவில் ஏதேனும் ஒரு நிகழ்வுகள் நடந்தால் தாமாக முன்வந்து அங்கு தன்னுடைய அடையாளமும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்தான் இந்த பிரசன்னா. இப்படி சென்றுகொண்டிருந்த பிரசன்னா அரசியல் வாழ்க்கை தற்போது கேள்விகுறியாகியுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு காரணமாக பார்க்கப்படுவது பிரசன்னாவின் குணம் தான் என்கிறார்கள். கடலூர் மாநாட்டில் மோடியை ஒருமையில் பேசியது, ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்திற்கு ஆதரவாக ஆண்டாளை விமர்சனம் செய்தது, விவாதங்களில் நேரடியாக தன்னை இந்து விரோதி என அடையாளப்படுத்தியது. போன்றவை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரசன்னா மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  சென்னையில் நான்கு நாட்களில் இவ்வளவு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

அதனால் பிரசன்னா தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வரவேண்டாம் என வேட்பாளர்கள் ஸ்டாலினிடம் கூறி இருக்கிறார்கள். இதனால் தற்போது பிரசன்னா விவாதங்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் தான் அடுத்து வருமானத்திற்கு என்ன செய்வது என்ற சிந்தனையில் இருக்கிறாராம், பிரசன்னா இதற்கிடையில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்திருந்த பிரசன்னாவை அழைக்காமல் அவமானப்படுத்தியதாக, துரைமுருகன் மீது வருத்தத்தில் இருந்திருக்கிறார் பிரசன்னா.

எனவே தற்போது துரைமுருகன் வீட்டில் பணம் இருந்த தகவலை வருமான வரித்துறையினரிடம்,யார் தகவல் கொடுத்திருக்கலாம் ஒருவேளை பிரசன்னாவிற்கு இதில் தொடர்பு இருக்கலாமோ என்று கடுமையான கோபத்தில் இருக்கிறாராம் துரைமுருகன்.

இதனால்தான் கட்சியில் இருந்து பிரசன்னாவை ஒதுக்கி வைத்திருக்கிறாராம் ஸ்டாலின். இந்த தகவல் தெரிந்த முதல் பாஜக ஆதரவாளர்கள் பிரசன்னாவை கடுமையாக சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  தொகுதி ஒதுக்காத திமுக விடாப்பிடியாக தொங்கும் விசிக ஆளூர் ஷா நவாஸ் பேச்சை கேட்டு நடுத்தெருவிற்கு வந்த பரிதாபம்

இதற்கிடையில் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரசன்னா பிரச்சாரம் மேற்கொள்ள சென்றபோது அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக உறுதிப்படுத்தாத தகவல் ஒன்றும் இணையத்தில் உலாவருகிறது.

இதற்கிடையில் இன்று துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரி வழக்கு தொடர்பான விவாதத்தில் பிரசன்னா கலந்துகொள்ள இருப்பதாகவும் அதனை துரைமுருகன் விரும்பவில்லை என்றும் சொல்லபடுகிறது.

©TNNEWS24

Loading...