எடப்பாடி மனைவி குறித்த பேச்சு பொய் செய்தி அடித்து விரட்டப்பட்ட பிரசன்னா?

எடப்பாடி மனைவி குறித்த பேச்சு பொய் செய்தி அடித்து விரட்டப்பட்ட பிரசன்னா?

திமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான பிரசன்னா நாளுக்கு நாள் தனது பொறுப்பற்ற பேச்சுகளால் பொதுமக்கள் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் முழுவதுமாக கெடுத்துவிடுவார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் தலையீட்டால் ஓரம்கட்டி வைக்கப்பட்டார்.

இந்த சூழலில் மீண்டும் வழக்கம்போல் தனது மூன்றாம் தர பேச்சுக்களை தொடங்கி இருக்கிறார் அதுவும் மிகவும் கீழ்த்தரமாக முதலமைச்சர் பழனிசாமி மனைவியை குறிப்பிட்டு பொதுவெளியில் அரசியலில் இல்லாத பெண்களையும் குறிவைத்து தாக்கியுள்ளார்.

பா.ம.க தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான் சேலம் எட்டுவழி சாலை திட்டத்தை நிறுத்துவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதுகூட தெரியாமல் வாய்கிழிய பேசியுள்ளார்.

இதையும் படிக்க:  வீடியோ மாமியார் மருமகள் சண்டையை பார்க்க வசதிசெய்து தருவேன் கார்த்தி தேர்தல் வாக்குறுதி. சிரிப்பாய் சிரிக்கும் சிவகங்கை மக்கள்.

இவரது பேச்சுக்கள் பலவும் இந்து மக்களை புண்படுத்தும் விதமாக இருப்பதனால் பலரும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர், நாட்டின் உயர் பதவிகளில் இருப்பவர்களை சாதாரண கவுன்சிலர் பொறுப்பில்கூட இல்லாத பிரசன்னா பேசுவது பலருக்கும் எரிச்சலை உண்டாக்கியது.

எனவே இவர் மக்களை ஏமாற்றும் விதமாக பல நாடகங்களை நடத்திக்காட்டினார், கடவுளே இல்லை என்று கொள்கை கொண்ட பிரசன்னா, தனது தந்தைக்கும் தாய்க்கும் இந்து முறைப்படி 60 – வது திருமணத்தை நடத்தி நானும் இந்து என்ற தோற்றத்தை உருவாக்க எண்ணினார், அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

எனவே வழக்கம் போல் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் குறித்து ஒருமையில் அதுவும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களுடன் சேர்த்து பேசி இருப்பது பலருக்கும் எரிச்சலை உண்டாக்கியது.

இதையும் படிக்க:  தேர்தல் அறிக்கையில் 'ரிப்போர்ட்கார்டை' வெளியிடும் பாஜக. எதிர்க்கட்சிகளுக்கு ஆப்பு வைத்த மோடி.

மேலும் இன்றும் இவர் நெல்லையில்தான் இருக்கிறார் என்ற செய்தி தெரிந்ததும், அங்கு இவரை கவனிக்க அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு இருக்கிறார்கள், இந்த தகவல் தெரிந்ததும் பிரசன்னா தனது வீதி பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ஓடி இருக்கிறார்.

பிரசன்னாவை செல்லும் இடங்களில் கவனிக்க ஒரு கூட்டம் தயாராக இருப்பதாகவும், அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ள எப்போதும் 4 பேருடன்தான் வெளியிலேயே வருகிறாராம்.

தனது facebook பக்கத்தில் பாஜக வெளியிடாத தேர்தல் அறிக்கையினை போலியாக பொய் செய்திகளையும் பரப்பி வருகிறார் இதனால் இவர் கலந்துகொள்ளும் இடங்களில் மட்டும் எங்கு உண்மையை பேசப்போகிறார் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்

©TNNEWS24.

Loading...

இதையும் படிக்க:  பதவிக்காக அடிக்கடி கொள்கைகளை மாற்றிக்கொண்டு கேவலமான அரசியல் செய்யும் திருமாவளவன்