ஆதாரத்துடன் வெளியானது அரவிந்த் கெஜ்ரிவாலின் நாடகம் பதில் சொல்ல முடியாமல் ஓடிய கெஜ்ரிவால்.

டெல்லி

கடந்த 4 ஆம் தேதி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மீ கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் மோத்தி நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது திடீர் என்று அவரின் வாகனத்தின் மீது ஏறிய இளைஞர் ஒருவர் அவரை கன்னத்தில் பளாரென அறைந்தார் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை தாக்கிய இளைஞர் பாஜகவை சார்ந்தவர் என்றும் பாஜக திட்டமிட்டே தன்னை தாக்கியதாகவும் கூறினார்.

மேலும் ஒரு முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் இதற்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பு என்றும் கூறினார்.

இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆனா நிலையில் இதை புலனாய்வு செய்த பிரபல ஆங்கில ஊடகம் அதிச்சிகர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது,

இதையும் படிக்க:  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமுத்திரக்கனி அப்போ இவரை பத்தி வந்த செய்தி எல்லாம் உண்மைதானா?

அதில் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியவர் ஆம் ஆத்மீ கட்சியின் முழுநேர உறுப்பினர் என்பதும் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரச்சாரத்திற்காக மக்களை கூட்டும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கான வீடியோ ஆதாரத்தையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது..அதன்முலம் கெஜ்ரிவால் வேண்டுமென்றே தன் கட்சியினரை வைத்து தன்னையே தாக்க சொல்லி அதன் மூலம் அனுதாப வாக்குகளை பெற முயன்றுள்ளார்.

இதேபோல அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலிலும் செய்தது குறிப்பிடத்தக்கது ..இந்த உண்மை வெளியானதால் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டால் என்ன சொல்வதென்று தெரியாமல் செய்தியாளர்களை பார்த்தாலே ஓடுகிறார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  கரூரில் பஸ், லாரிகள் உடைப்பு பொது சொத்துக்களை நாசம் செய்த திமுகவினர் மீண்டும் தொடங்கிவிட்டதா ரவுடிசம்?
Loading...