ராகுல் காந்தி இந்திய குடிமகன் இல்லையா ? சோனியாவிற்கு பிரசவம் பார்த்த செவிலியர் அதிரடி பேட்டி

அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது அவரின் குடியுரிமையை சந்தேகம் எழுந்தது அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் அவர் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தரப்பு மணிக்கணக்கில் விளக்கம் அளித்ததை ஏற்று அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது ,

இருந்தும் அவரின் குடியுரிமையில் சந்தேகம் உள்ளதால் அது பற்றிய வழக்கு ஒன்றை உச்சநீதி மன்றத்தில் பாஜக தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் , நேற்று ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல ஹிந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அதில் 1970 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் தான் பயிற்சி செவிலியராக பணியாற்றியதாகவும் அப்போது தான் அங்கு பிரசவத்திற்காக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  பினராய் விஜயனின் இந்த செயல் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது!

அப்போது பிரசவ அறைக்கு வெளியில் ராஜிவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார் மேலும் ராகுல் காந்தியை கையில் எடுத்த செவிலியர்களும் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார் அவர்

மேலும் ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது தனக்கு மகிழிச்சி என்றும் அடுத்த முறை அவர் வயநாடு வரும்போது அவரை நேரில் சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்போது இந்த பேட்டி இன்னும் புது புது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது, ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்தார் என்பதை யாரும் மறுக்கவில்லை அதே நேரம் அவர் தன்னை இங்கிலாந்து நாட்டவர் என்று கூறியே இங்கிலாந்தில் படித்தது மற்றும் தொழில் தொடங்கியது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிக்க:  தமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி பாஜக,பாமக,தேமுதிக கூட்டணியில் இணைத்தனர்

தற்போது ஹோலி பேம்லி மருத்துவமனை அளித்த விளக்கத்தில் அந்த செவிலியர் எங்கள் மருத்துவமனையில் பணியாற்றினாரா என்று எங்களுக்கு தெரியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால், காங்கிரஸ் தரப்பினர் வேண்டுமென்றே அந்த பெண்ணை அழைத்து பேச வைத்தார்களா என்ற கேள்வியை பாஜக மற்றும் சுப்ரமணிய சாமி போன்றோர் எழுப்பியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...