ஸ்மிருதி இராணிக்கு பயந்து வயநாட்டில் தஞ்சம் அடைந்த ராகுல் அங்கும் களம் இறங்குவோம் பாஜக அதிரடி.

ஸ்மிருதி இராணிக்கு பயந்து வயநாட்டில் தஞ்சம் அடைந்த ராகுல் அங்கும் களம் இறங்குவோம் பாஜக அதிரடி.

அமேதி.,

காலம் காலமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி., இந்த முறை கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்றமுறை ராகுல் காந்தியை எதிர்த்து களத்தில் ஸ்மிருதி இராணியை பாஜக நிறுத்தியது குறிப்பாக 2009 – ம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் 70 % அதிகமான வாக்குகளை பெற்று MP ஆக தேர்வானார், ஆனால் 2014- ம், ஆண்டு ஸ்ம்ரிதி இராணி, ராகுலை எளிதாக வெற்றி பெற விடவில்லை, இந்த முறை வெறும் 41% வாக்குகளை பெற்றே அமேதி தொகுதிக்கு தேர்வானார்.

இதையும் படிக்க:  வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்ததாக கூறிய ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜிவ் குமார்

எனவே இந்த முறை தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக அமையுமா என்று காங்கிரஸ் சார்பில் சந்தேகம் உருவாகியுள்ளதாம். எனவே தங்களுக்கு சாதகமான இரண்டாவது தொகுதியை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை முயல்வதாக தகவல்கள் வெளியாகின.

அதனை தொடர்ந்து கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ராகுல் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்மூலம் ராகுல் கேரளாவில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது, இதற்கு காரணம் வயநாடு தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்கு அதிகம் எனவே அது தங்களுக்கு சாதகமான தொகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது, பாஜக தலைமை ஒரு அறிவிப்பினை நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தெரிவித்துள்ளது, அதில் ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அங்கு ஸ்ம்ரிதி இராணியும் களத்தில் இறங்குவார் என்று கூறியுள்ளது.

இதையும் படிக்க:  உருவானதா இந்துக்கள் வாக்கு வங்கி.. ஓட்டுக்கேட்டு வரக்கூடாது வீட்டு வாசல்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கடும் பயத்தில் கம்யூனிஸ்ட்கள்

எப்படி பார்த்தாலும் இந்த முறை ஸ்மிருதியை எதிர்த்து ராகுல் வெற்றி பெறுவாரா? இல்லை பின் தங்குவாரா என்ற கேள்வியே, அதிகம் எழுந்துள்ளது.

©TNNEWS24

Loading...