இராமநாதபுரம் பகுதியில் கண்ணப்பன் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணரை இழுவுபடுத்திய கூட்டணிக்கு வாக்கு கேட்டு வருவதா சொந்த சமூகத்தினரால் விரட்டப்பட்ட கண்ணப்பன்.

இராமநாதபுரம்.,

இராமநாதபுரம் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அ.தி.மு.க-வில் இருந்து சமீபத்தில் விலகிய ராஜ கண்ணப்பன் முதுகுளத்தூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து இன்று தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் நவாஸ் கனியுடன் இணைந்து வாக்குகளை சேகரித்தார். அப்போது மக்களிடையே அதிமுக மோடியிடம் அடிமையாக போய்விட்டதாகவும், 5 வருடத்தில் பாஜக ஒன்றையுமே உருப்படியாக செய்யவில்லை என்றும் இந்து, முஸ்லீம் என்றெல்லாம் பார்த்து ஓட்டு போட கூடாது, நவாஸ் கனி வந்தால் மட்டுமே இராமநாதபுரத்தை காப்பாற்ற முடியும் என்றார்.

இதையும் படிக்க:  தீர்ப்பை மதிக்கவிட்டால் தந்திரி வேலையை விட்டு செல்லலாம் பினராயி விஜயன் திமிர் பேச்சு!

அதனை தொடர்ந்து தேவிபட்டினம் யாதவ தெருவில் பிரச்சாரம் செய்வதற்காக பிரச்சார வாகனம் உள்ளே சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒன்று சேர்ந்து வாகனத்தை உள்ளே விடாமல் தடுத்தனர், உடன் வந்தவர்கள் கண்ணப்பன் வந்திருக்கிறார் என்று சொன்னதும் மிகவும் கோபம் அடைந்துவிட்டார்கள்.

திமுக கூட்டணிக்கு வாக்குகளை சேகரிக்கும் வீரமணி ஆயர் குலத்தில் பிறந்த கிருஷ்ணரை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினார், ஆனால் இராமநாதபுரம் வேட்பாளராக போட்டியிடும் நவாஸ் கனி ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை, ஆனால் யாதவ சமுதாயத்தை முன்னிறுத்தும் நீங்கள் இதே கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வந்ததால் உங்களையும் சேர்ந்து ஊருக்குள் விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டனர்.

இதையும் படிக்க:  நயினார் நாகேந்திரனுக்கு எதிராக முஸ்லீம் லீக் நடத்திய முதல் கூட்டத்திலேயே அடி உதை புஷ்வாணமாகி போன வேட்பாளர்.

கிருஷ்ணர் குறித்து வீரமணி பேசியபோது முதலில் கண்டனத்தை பதிவு செய்யாத கட்சிகளுக்கு எங்கள் ஓட்டு இல்லை என்றும் சொல்லிவிட்டனர்.

©TNNEWS24

Loading...