வாக்களித்த பின்பு ரஜினி சொல்லிய அந்த வார்த்தை !

வாக்களித்த பின்பு ரஜினி சொல்லிய அந்த வார்த்தை

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வரிசையில் நின்று பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அங்கு வந்த ரஜினிகாந்த், உடனடியாக தனது வாக்கினை பதிவு செய்து கூடி இருந்த அனைவருக்கும் தனது வணக்கத்தை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கேள்விகளை எழுப்ப பதில் ஏதும் கூறாமல் அமைதியாக கடந்து சென்றவர் அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்ற மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

கடந்த 2011 – ம் ஆண்டு சட்ட சபை தேர்தலின் போது வாக்களித்து வெளியே வந்த பிறகு தனது கைகளை இரண்டு விரல்களை காட்டி இரட்டை இலைக்கு ஆதரவு என்பது போன்ற நிலைப்பாட்டினை தெரிவித்தார்.
தற்போது அதுபோல் ஏதேனும் சமிக்கைகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்தவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதையும் படிக்க:  கேரளாவில் எத்தனை தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று தெரியுமா?

©TNNEWS24

Loading...