வம்பை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின் 13 தொகுதிகளில் முடிவை மாற்றும் ரஜினி !

வம்பை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின் 13 தொகுதிகளில் முடிவை மாற்றும் ரஜினி !

சென்னை.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பேச்சுக்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஸ்டாலின் மீதான வெறுப்பினை அதிகப்படுத்தியுள்ளது.

தனது நீண்டநாள் கோரிக்கையான நதிநீர் இணைப்பு திட்டத்தினை தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளதற்கு வரவேற்பும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அதனை பெருத்துப்படுத்தும் விதமாக, பாஜகவின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டுமேதான் புரியும் என்று நக்கலாக சொல்லி இருந்தார்.

ஆனால் இதன் பின்னணியில் மிக பெரிய அரசியல் உள்ளது என்பது அரசியலை தினமும் கவனித்து வருபவர்களுக்கு மட்டுமே புரியும், சிறிது நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த நிர்வாகி ஒருவரை, திமுகவில் இணைத்தனர்.

இதையும் படிக்க:  தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்கிய அருண்ஜெட்லி.

அவர் திமுகவில் இணையும் விழாவை மிக பிரமாண்டமாக ஸ்டாலின் நடத்தினார், மேலும் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைந்தவார்கள் என்றும் சொல்லி இருந்தார். அதற்கென பல்வேறு உள்ளடி வேலைகளையும் திமுக தரப்பில் மேற்கொண்டு வந்திருந்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தேர்தலுக்கு முன்பாக சரியாக மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் பொதுக்கூட்டத்தினை நடத்த திமுக சார்பில் ஏற்பாடு செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த தகவல் ரஜினிக்கு தெரியவரவே அரசியலில் தற்போது அமைதியாக செல்லும் தன்னையும், தனது ரசிகர்களையும் வேண்டுமென்றே சீண்டுவதாக முக்கிய நபர்களிடம் சொல்லி இருக்கிறார்.

அதனால் திமுக தரப்பிற்கு அதிர்ச்சி கொடுக்க பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாராட்டி பேட்டி கொடுத்திருக்கிறார், இனி திமுக தொடர்ந்து ரஜினி மன்ற நிர்வாகிகளை இணைக்க நினைத்தால் வெளிப்படையாக அறிக்கை விடவும் தயங்கமாட்டேன் என ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:  பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி யாருக்கு வெளியானது தேர்தலுக்கு பிந்தைய அதிரடி சர்வே !

தற்போது திமுக அந்த கடுப்பில்தான் மெல்லவும் முடியாமல் முழங்கவும் முடியாமல் ரஜினியை எதிர்த்து பாஜகவுடன் தொடர்பு படுத்தி பேட்டி அளித்துள்ளார்.

தற்போதே ரஜினி ரசிகர்கள் களத்தில் இறங்கி நேரடியாக வாக்குகளை சேகரிக்க ஆரம்பித்தால் அது திமுக கூட்டணிக்கு கடும் பாதிப்பை தரும் என்றும் குறிப்பாக 13 தொகுதிகளின் நாடாளுமன்ற முடிவுகள் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவே அமையும் என்பதால், ரஜினி ரசிகர்களால் தனது கட்சிக்கு ஆபத்து வருமோ என்று கடும் பதற்றத்தில் இருக்கிறாராம் ஸ்டாலில்.

வம்பை ஆரம்பித்து வைத்துவிட்டு இப்போது முழித்தால் என்ன செய்வது?

©TNNEWS24

Loading...