திடீரென செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆண்டவன் அருளால் மோடி ஆட்சிக்கு வந்ததும் இதனை நிறைவேற்றுங்கள் வாழ்த்து சொன்ன ரஜினி

திடீரென செய்தியாளர்களை சந்தித்த ரஜினி.. பாஜகவிற்கு வாழ்த்து மறைமுக ஆதரவா?

சென்னை

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியகருத்துகள் வெளிபடையாகவும், தனது தனது கனவை முன்மொழிந்த பாஜகவிற்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

நதிகளை இணைக்கவேண்டும் என்பது எனது கனவு அதனை வலியுறுத்தி முன்னாள் பிரதமர் வாய்பாய் அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

தற்போது பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளதுடன், தனி அமைச்சகத்தை நியமிக்க போவதாக சொல்லி இருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார்.

ஆண்டவன் அருளால் NDA மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதலில் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:  (#வீடியோ உள்ளே )ராகுல் கல்லூரி நிகழ்ச்சியில் விண்ணை பிளந்த மோடி மோடி கோசம் வேறுவழியின்றி சரண்டரான ராகுல்.

ரஜினி திடீரென சந்தித்து பாஜகவின் தேர்தல் அறிக்கையை வாழ்த்தி இருப்பது, பாஜகவிற்கு அளித்துள்ள மறைமுக ஆதரவாக இருக்குமோ என்ற ரீதியிலும் ஒரு கருத்து நிலவுகிறது.

©TNNEWS24

Loading...