தேனில் விஷம்கலந்துகொடுக்கும் இடதுசாரிகள்… கண்டித்த ரவிக்குமார்.

தேனில் விஷம்கலந்துகொடுக்கும் இடதுசாரிகள்… கண்டித்த ரவிக்குமார்.

சென்னை.,

தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்பு பிரச்சாரகூட்டங்களில் ஒரு தலைப்பட்சமாக செயல்படும் அரசியல் சார்புள்ள பத்திரிகையாளர்கள் இருப்பதாக இந்து தமிழர் கட்சியின் நிறுவனத்தலைவர் இராம.ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

“தேனில் விஷம் கலந்து கொடுப்பதுபோல்-
தேர்தல் பிரச்சார விழிப்புணர்வுக் கூட்டங்களில் இடதுசாரிகள்”

தேர்தல்ஆணையமேகற்பு தவறாதே


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும்.

*வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது, நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகாரத்திற்கு வருபவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற தேர்தல் வாக்களிப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்திக் கொண்டு வருவதற்கு இன்று தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம் .

இதையும் படிக்க:  அடேங்கப்பா திருவாரூர் இடைத்தேர்தலில் ஒரு குடும்பத்துக்கு இவ்ளோ தொகையா?

*அதே நேரத்தில் இந்த விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை பள்ளி கல்லூரிகள் பொது இடங்களில் நடத்துவதற்கு பத்திரிக்கை நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துவதாக நாங்கள் அறிகிறோம்.

*குறிப்பாக இந்து தமிழ் பத்திரிகையும் தேர்தல் ஆணைய தோடு ஊடக பங்குதாரராக இணைந்திருக்கிறது.

*இதிலே முக்கிய பங்கு வகிக்கக்கூடிய “சமஸ்” என்கின்ற ஒரு எழுத்தாளர் தன்னை இடதுசாரி என்று வெளிப்படையாக காட்டிக் கொண்டவர்.

பெரியாரிய
கொள்கை, அண்ணா கொள்கை தான் தமிழர்களை தமிழ் மக்களை காப்பாற்றும் என்றெல்லாம் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பேசிக் கொண்டு வருபவர்.

*இந்த எழுத்தாளர் சமஸ் என்பவர் தேர்தல் ஆணையத்தின் மூலமாக நடத்தக்கூடிய முழு வாக்களிப்பு விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்களில் பங்கு எடுத்து பேசுவது என்பது ஒரு சார்பு நிலைக்கு தேர்தல் ஆணையத்தை தள்ளிவிடும்.

இதையும் படிக்க:  தூத்துக்குடியில் விரட்டி அடிக்கப்பட்ட கௌதமன் தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை இதுதானா?

*ஒன்று நடுநிலையான பத்திரிகையாளர்களை வைத்து இந்த தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க வைக்கலாம்,

*இல்லையென்றால் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் எதிராக திமுக கூட்டணிக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை தேனில் விஷம் கலந்து கொடுப்பது போல தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்களில் சமஸ் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

*இதை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

*இல்லையெனில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை கண்காணிக்க வேண்டும்.

*மீறி ஒரு சார்பான நிலைக்கு சமஸ் போன்ற எழுத்தாளர்கள் பேசுவதை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமானால் தன்னுடைய தேர்தல் நடுநிலை கற்பு தன்மையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறியதாக நாங்கள் கருதுவோம்.

இதையும் படிக்க:  தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்கிய அருண்ஜெட்லி.

*இந்த ஒரு சார்பு நிலையை தேர்தல் ஆணையத்தின் நிலையில் பொது மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு

*சமூக ஊடகத்தின் வாயிலாக,
சமூக செயல்பாட்டாளர்கள் வாயிலாக
பொது மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
என்பதை
இந்து தமிழர் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இராம. இரவிக்குமார்
நிறுவனதலைவர்
இந்து தமிழர் கட்சி
86430_81430

©TNNEWS24

Loading...