இராமநாதபுரம் சீமையில் பறக்கபோவது காவி கொடியா? பச்சைகொடியா? களநிலவரம் என்ன?

இராமநாதபுரம் சீமையில் நேருக்கு நேர் மோதும் பாஜக – முஸ்லீம் லீக் பறக்க போவது காவி கொடியா? பச்சைகொடியா? களநிலவரம் என்ன?

இராமநாதபுரம்

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்த முறை பாஜக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகிவிட்டது.

முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார் இவர் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் S.T. கொரியர் நிறுவனத்தின் தலைவராக நவாசிகனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறியப்படுகிறது, குறிப்பாக இந்தமுறை நயினார் நாகேந்திரன் அல்லது கருப்பு முருகானந்தம் ஆகிய இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு இருக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன .

இதையும் படிக்க:  மீண்டும் கலவரத்தை உண்டாக்கிய ஜோதிமணி வேட்டி கிழிந்து ஓடிய நாஞ்சில் சம்பத் கரூரில் நிற்காத பரபரப்பு.

பாஜகவை பொறுத்தவரை ராமநாதபுரம் நகராட்சியில் சென்ற முறை அதன் வேட்பாளராக களம் இறங்கிய குப்புராம் அதிக வாக்குகளை பெற்றிருந்தார், எனினும் கிராம பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா அதிக அளவு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த முறை அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவது பாஜகவிற்கு மிக பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது, அதே சமயம் தினகரன் கட்சி பிரிக்கும் வாக்குகளை நம்பி களம் இறங்குகிறது முஸ்லீம் லீக் அதிமுக வாக்குகள் பிரிந்தால் நிச்சயம் வெற்றி நிச்சயம் என்று கணக்கிட்டுள்ளார்களாம்.

இராமநாதபுரம் மண்ணை பொறுத்த அளவு இந்தமுறை இந்துக்கள் ஓட்டு சாதி அடிப்படையில் பிரியாமல், மதம் அடிப்படையில் ஒன்றிணையும் என்றே பார்க்கப்படுகிறது, அதற்கு முக்கிய காரணமாக ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் திருவிழாவின் போது மேளம் வாசிக்க கூடாது என்ற கட்டுப்பாடு வைத்தது, இந்துக்களுடன் மோதல் போக்கு ஆகியவை இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  இராமநாதபுரத்தில் களம் இறங்கிய நயினார் தொடங்கியது முதல் சம்பவம்

இராமநாதபுரம் தொகுதியில் இரட்டை இலை மற்றும் உதய சூரியன் சின்னம் போட்டியில் இல்லாத பட்சத்தில் தாமரை சின்னமே மக்களுக்கு அதிகம் பரிச்சயமானதாக உள்ளது எனவே காவி கொடி ராமநாதபுரம் மண்ணில் பறப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகவும் களத்தில் இறங்கி பணியாற்றினால் வெற்றி நிச்சயம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...