இந்த தவறை நீங்க செய்திருக்க கூடாது ஸ்டாலின் – பாண்டே கருத்து

சமூகவலைத்தளம்.,

முன்னணி செய்தியாளர் பாண்டே தனது கணிப்பினை இன்று வெளியிட்டார் அதில் திமுக மக்களவை தேர்தலில் சில குறிப்பிட்ட தகவல்களை செய்திருக்காவிட்டால் நிச்சயம் 30 முதல் 35 தொகுதிகளை வென்றிருக்கும் இதற்கு ஸ்டாலினின் முடிவுகளே காரணம் என்ற கருத்தினையும் பாண்டே சொல்லி இருந்தார் அவை என்னவென்று பார்க்கலாம்.

திமுக காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் 10 இடங்களை ஒதுங்கியிருக்க கூடாது 5 தொகுதிகள் ஒதுக்கியிருந்தால் கூடுதல் 5 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு வெற்றி அடைந்திருக்க வாய்ப்பு உண்டு.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளுக்கு பதில் ஒரு தொகுதிகள் ஒதுக்கினாலே சரியாக இருந்திருக்கும்.

அனுபவமுள்ள TR பாலு உள்ளிட்டவர்களை தவிர்த்து கனிமொழியை டெல்லிக்கு அனுப்பி கூட்டணி பேசவைத்தது ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு என்றும் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  என்ன கிழி அம்பானி வீட்டிற்கு போறீங்க அங்க இப்படி பண்ணுவீர்களா ஸ்டாலினை விளாசிய கஸ்தூரி

மேலும் வலுவில்லாத கூட்டணிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியத்துக்கு பதில் நிச்சயம் கூட்டணியில் பாமகவை சேர்த்திருக்க வேண்டும் இது திமுக கூட்டணி கணக்கில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் திமுக நிச்சயம் 30-35 தொகுதிகளை வென்றிருக்க முடியும் தனது தவறான முடிவுகளால் தற்போது அதிமுக கூட்டணி 15 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றும் பாண்டே கணித்து கூறியுள்ளார்.

பாண்டேவின் கணக்குப்படி பார்த்தால் ஸ்டாலின் சொல்லிவருவதுபோல் 25 தொகுதிகள் தேறுவதே மிக கடினம் என்று தெரிகிறது மேலும் திமுகவிற்கு இந்த தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்றே தற்போது தெரியவருகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  கல்லூரியில் நடக்கும் இந்து ஆன்மீக கண்காட்சியில் கிருஸ்தவர்கள் " பிட் நோட்டீஸ் "
Loading...