யாருக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் தேர்தலுக்கு பிறகு பாண்டே வெளியிட்ட தகவல் !

பாண்டே வெளியிட்ட தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப்பு திமுக அதிமுக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் !

சமூகவலைத்தளம்.,

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கிறது, இதில் தேர்தலுக்கு பிறகு யார் எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

சாணக்யா நிறுவனர் பாண்டே நேற்று தனது தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டார், அதில் அவர் தற்போது தேர்தலுக்கு பிறகு களத்தில் சென்று மக்களை சந்திக்கவில்லை என்றும் வரக்கூடிய தகவலின் அடிப்படையில் சாணக்யா முன்னர் நடத்திய கணிப்பின் அடிப்படையில் தனது முடிவினை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  இந்த டிவியில் தான் பணியாற்ற போகிறாரா ரங்கராஜ் பாண்டே!

அதில் சென்ற முறை திமுக கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 14 இடங்களை கைப்பற்றும் என்றும் 5 இடங்கள் இழுபறியாக இருப்பதாக சொல்லி இருந்தார். தற்போது வருகிற தகவலின் அடிப்படையில் இழுபறியான 5 தொகுதிகள் திமுகவிற்கு சாதகமாக சென்றிருப்பதாகவும் மொத்தத்தில் இந்த முறை , திமுக கூட்டணி 25 தொகுதிகள் கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 13 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதில் இரண்டு இடங்கள் இரண்டுகட்சிகளுக்கும், கூடலாம் குறையலாம் என்றும் தனது கணிப்பின் மூலம் பாண்டே தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும் என்று முதலில் பல கருத்து கணிப்புகளும் சொல்லிவந்த சூழலில் இப்போது 25 இடங்கள் வரை மட்டுமே பெறலாம் என்றே தெரிகிறது.

இதையும் படிக்க:  நீ முஸ்லீம் இல்லை தலித் உகண்டா சென்ற ஷா நவாஸ் இஸ்லாமியர்களிடம் சிக்கி படும் பாடு காப்பாத்துவாரா திருமா, குரல்கொடுப்பார்களா கம்யூனிஸ்ட்கள்

©TNNEWS24

Loading...