பதிவான வாக்குகள் யாருக்கு வெற்றியை தேடித்தரும்? தினகரன், கமல், சீமான் வெற்றிவாய்ப்பு எப்படி பாண்டே வெளியிட்ட புது கணிப்பு.

சமூகவலைத்தளம்.,

தமிழகத்தில் பதிவான 71.9 % வாக்குகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை ஆளும் தரபிற்கே மீண்டும் வெற்றியை உறுதி படுத்துமா என்பதனை குறித்து ரங்கராஜ் பாண்டே தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2009 மற்றும் 2019 தற்போது வரை நடந்து முடிந்த தேர்தல்களின் வாக்கு சதவிகிதத்தை அடிப்படையாக கொண்டு பாண்டே தனது கணிப்பினை எடுத்து சொல்லி இருக்கிறார்.

இதுவரை தமிழகத்தில் 2009 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு 73.29 %

2011 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 78.53%

2014 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு 74.23%

2016 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் 75.53

இதையும் படிக்க:  இதனால்தான் பாஜகவில் இணைந்தேன் !

தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 71.9 %

இங்கு கவனிக்க படவேண்டிய விஷயமாக பாண்டே குறிப்பிடுவது எப்போதெல்லாம் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததோ அப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, அந்த சூழலில் தற்போது பதிவான வாக்கு சதவிகிதம் என்பது 71.9 தான்.

இது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் இருப்பினும் தற்போது வழக்கமாக ஏற்படும் ஆளும்கட்சி எதிர்ப்பு மனநிலை காரணமாக இது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைகிறது, இந்தமுறை திமுக கூட்டணி 25 இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 14 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுவது தினகரன், சீமான் கமல் ஆகியோர் இந்த முறை அதிக அளவிலான மாற்று வாக்குகளை பெறுவதாகவும் அதன் சதவிகிதம் 20 % வரை செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிச்சயம் மூவரும் தேர்தலில் பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இரண்டு தரப்பிலும் இருப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் படிக்க:  யாருக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் தேர்தலுக்கு பிறகு பாண்டே வெளியிட்ட தகவல் !

நிச்சயம் முன்பு கருத்து கணிப்புகள் சொல்லி இருந்ததுபோல் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என்ற சூழல் இல்லாததையே இது காட்டுகிறது.

TNNEWS24 ©

Loading...