அட்ராசக்க பாண்டே விவாத நிகழ்ச்சியில் வரப்போகிறார் ! மீண்டும் பழைய பாண்டேவாக சூடான விவாதம் தயார் !

அட்ராசக்க பாண்டே விவாத நிகழ்ச்சியில் வரப்போகிறார் ! மீண்டும் பழைய பாண்டேவாக சூடான விவாதம் தயார் !

சமுகவலைத்தளம்.,

தந்தி டிவி – யில் இருந்து வெளியேறிய பாண்டே தற்போது சாணக்யா எனும் டிஜிட்டல் டிவி சேனலை நடத்தி வருகிறார். இது பலரும் அறிந்த விஷயம் ஆனால் பலருக்கும் தெரியாத மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

“கேள்விக்கு என்ன பதில்” நிகழ்ச்சியின் மூலம் பாண்டே பல அரசியல் தலைவர்களை பேட்டி கண்டிருந்தாலும் முதலில் பாண்டே மக்கள் மனங்களில் பதிந்தது “ஆயுத எழுத்து”எனும் தினசரி விவாத நிகழ்ச்சியின் மூலம்தான். எனவே அது போன்ற ஒரு விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய பாண்டே முடிவெடுத்துள்ளார்.

இதையும் படிக்க:  பதிவான வாக்குகள் யாருக்கு வெற்றியை தேடித்தரும்? தினகரன், கமல், சீமான் வெற்றிவாய்ப்பு எப்படி பாண்டே வெளியிட்ட புது கணிப்பு.

அதற்கான முழு முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ள சாணக்யா குழுவினர், இரவு 7 மணிக்கு தினமும் விவாதங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். டிஜிட்டல் ஊடகம் என்பதால் 7 மணிக்கு நிகழ்ச்சியை தொடங்கினால் அது பொது மக்களை சென்றடையும் என்ற கணக்கு நிர்ணயித்து இரவு 7 மணியினை தேர்வு செய்திருக்கிறார்களாம்.

வாரத்தில் ஞாயிற்று கிழமையை தவிர்த்து அனைத்து நாட்களும் மக்களை சூடான விவாதத்தின் மூலம் தனது பணியை தொடங்க இருக்கிறாராம் பாண்டே , நிகழ்ச்சியின் பெயர் மற்றும் நேரம், செட் ஆகிய அனைத்து வேலைகளையும் நிறைவடைந்துவிட்டன.

நாடாளுமன்ற தேர்தல்கள் நிறைவடையும் அன்று முதல் நிகழ்ச்சியை வரும் 18 அல்லது 19 -தேதி ஆகிய நாட்களில் தொடங்கலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க:  திடீர் திருப்பம் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சியில் தலைமை செய்தியாசிரியராக இணைந்தார் பாண்டே.

பாண்டேவின் வரவினை எதிர்பார்த்து பலர் காத்திருக்கும் நேரத்தில் தினசரி விவாத நிகழ்ச்சிகளில் பாண்டே பங்கேற்பது மீண்டும் ஒரு காரசாரமான விவாத நிகழ்ச்சியை நிச்சயம் உருவாக்கும் என்றும் அது பயனுள்ள வகையில் மற்ற ஊடகங்கள் பேச துணியாத மக்கள் நிகழ்வுகளை அலசும் வகையில் அமையும் என்றே நம்ப படுகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...