இப்போ சந்தோசமா தமிழ் அமைப்புகளே ! மீண்டும் வெடித்தது கலவரம்

பெங்களூர்.,

தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் மற்றும் சில இளைஞர்கள் ஆரம்பித்துவைத்த பிரச்சனை இன்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது.

நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி இன்னும் சில அமைப்புகள் ஒன்றுகூடி தமிழக வேலை தமிழருக்கே என்று சமூகவலைத்தளங்களில் பதித்தனர், அது சிலமணி நேரங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது, இது தமிழகத்தில் உள்ள நபர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் வெளிமாநிலங்களில் பணிபுரியும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை வேட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டீ கடை நடத்தி வருபவர் முரளி இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை பூர்விகமாக கொண்டவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர், பெங்களூரில் கூலி தொழிலாளியாக டீக்கடையில் வேலைபார்த்த முரளி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சிட்டி யூனியன் வங்கியில் இரண்டுலட்சம் தொழில்கடன் வாங்கி சொந்தமாக டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இதையும் படிக்க:  ஏன் சார் பொய்யா பேசுறீங்க யாரு நானா நிரூபிக்க முடியுமா வாயை விட்ட சீமான் ஆதாரத்தை எடுத்துப்போட்டு அசிங்கப்படுத்திய தொலைக்காட்சி !

நேற்று இரவு சரியாக 7 மணிக்கு முரளியின் கடைக்கு வந்த 6 இளைஞர்கள் உங்கள் தமிழ்நாட்டில் வேலை தமிழர்களுக்கு மட்டுமே என்று சொல்றாங்க நீ ஏன் எங்க மாநிலத்தில் இருக்கிறார் வெளியேறு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கடையையும் உடைத்துள்ளனர்.

தொழில் போட்டி காரணமாக சிலர் நேற்று நடந்த தமிழ்நாடு தமிழருக்கே என்ற போராட்டத்தை பயன்படுத்தி முரளியின் கடையை சேதப்படுத்தி இருப்பது இன்று அவரின் வாழ்வாதாரத்தையே பாதித்து விட்டது. பாதிக்கப்பட்ட முரளி கூறும்போது தமிழ் அமைப்புகளோ கன்னடர்களோ யார் மோதலை தொடங்கினாலும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் நாங்கதான் வெளிமாநிலத்தில் பணிபுரியும் ஒவ்வொருத்தன் ரத்தத்தை காவு வாங்கித்தான் நீங்கள் அரசியல் செய்யவேண்டுமென்றால் அதில் போகும் முதல் உயிர் என்னுடையதாக இருக்கட்டும் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  நீ யாரு உன் குடும்பத்தோட யோக்கியம் என்ன எல்லாம் எனக்கு தெரியும் வெளுத்து வாங்கிய TTV தினகரன்

தற்போது கன்னடர்களும் கர்நாடகாவின் வேலை கர்நாடககாரர்களுக்கே என்று அவர்களும் பங்கிற்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இனி பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க இரண்டு மாநில அரசுகளும் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

Feature image – file photo

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...