ஸ்டாலின் நடத்திய 2G பேரம் கணவர் மரணத்திற்கு யார் காரணம் அனைத்து உண்மைகளையும் செய்தியாளர்கள் மத்தியில் போட்டுடைத்தார் பானு !

ஸ்டாலின் நடத்திய 2G பேரம் கணவர் மரணத்திற்கு யார் காரணம் அனைத்து உண்மைகளையும் செய்தியாளர்கள் மத்தியில் போட்டுடைத்தார் பானு

சென்னை.,

சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் 2G வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மர்ம மரணம் அடைந்த சாதிகபாட்சா மனைவி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கணவர் மரணத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் ஸ்டாலினும்தான் காரணம் என்று அனைத்து தகவல்களையும் சொல்லியுள்ளார்.

குறிப்பாக எனது கணவருக்கு மட்டும்தான் ஸ்டாலின்’ ஷாகித் படுகோனே’ எனும் தொழில் அதிபரை சந்தித்து 2G வழக்கில் பேரம் பேசியது குறித்த தகவல் தெரியும், இதனை அவர் சி.பி.ஐ அலுவலகத்தில் நடந்த விசாரணையில் சொல்லிவிட்டார்.

இதையும் படிக்க:  இந்தியாவெல்லாம் ஒரு நாடா அங்க மனுஷன் வாழ்வானா கௌசல்யா ஆவேசம் !

அதன் பிறகுதான், அப்போதைய அமைச்சர் ராசா தொடர்ந்து எனது கணவருக்கு அழுத்தம் கொடுத்து அவரை தற்கொலைக்கு தள்ளிவிட்டார், தொடர்ந்து இப்போது என்னையும் கொலை செய்ய பார்க்கிறார்கள், நான் எனது கணவர் நினைவுநாளில் வெளியிட்ட கூடா நட்பு கேடாய் முடியும் என்று கொடுத்திருந்த விளம்பரத்தை தொடர்ந்து இப்போது எங்களை கொலை செய்ய பார்க்கிறார்கள்.

எங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் வருகிறது இதற்கு ஸ்டாலின் காரணமாக இருக்கலாம், நான் இறந்தால் அதற்கு இவர்களே காரணமாக இருக்கலாம் என்றும் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்.

ஸ்டாலின் 2G வழக்கில் பேரம் பேசிய செய்தி வெளியாகி இருப்பதால் தற்போது ஸ்டாலினை தேர்தல் முடிந்ததும் இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் என்றும் நிச்சயம் இதன்மூலம் பல்வேறு ஆதாரங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெறபோவது யார் ?

©TNNEWS24

Loading...