ஆட்சி மாற்றமா? இடைத்தேர்தலில் அதிமுக திமுக அமமுக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் சர்வே ரிசல்ட்.

ஆட்சி மாற்றமா? இடைத்தேர்தலில் அதிமுக திமுக அமமுக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் சர்வே ரிசல்ட்.

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற ஜுரம் அடித்துக்கொண்டிருக்க, தமிழக அரசியல் களத்திலோ இடைத்தேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? இல்லை மீண்டும் அதிமுக ஆட்சியே தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

மற்றொருபுறம் புறம்  4 தொகுதிகளையும் தட்டித் தூக்க வேண்டும் என அதிமுகவும் திமுகவும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் தினகரனும் இணைந்துள்ளார்.

மே 23 அன்று முடிவுகள் வெளியாகும் முன்னரே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு நெருங்கிய நிறுவனங்கள் மூலம் ரகசிய சர்வே எடுத்து வருகின்றன.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனக்கு 22 தொகுதி இடைத்தேர்தலில் 3 சீட் உறுதியாக கிடைக்கும் என நம்புகிறார். அதிமுக தரப்பினரோ அதிகபட்சம் 11, குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் வெற்றி உறுதி எனக் கணித்துள்ளது.

இதையும் படிக்க:  தமிழகத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் யார் யார் எந்த எந்த தொகுதிகளை கைப்பற்றுவார்கள் பிரபல ஜோதிடரின் கணிப்பு !

இந்த கணக்குகள் எல்லாம் பணப்பட்டுவாடாவுக்கு பிறகு நடந்தவை. பணப்பட்டுவாடாவுக்கு முன்பாக 22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனச் சொன்ன டி.டி.வி.தினகரன் தற்போது களநிலவரத்தை உணர்ந்து இறங்கி வந்து இருக்கிறார்.

அதிமுக பணப்பட்டுவாடா செய்ததை நம்பி 11 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தொடரும் நம்பிக்கையில் இருக்கிறது. திமுக 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறுகிறார்கள்.


எது எப்படியோ இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்றே நெருங்கிய வட்டாரங்கள் தற்போது சொல்லிவருகிற செய்தி என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  போட்டியிட்ட 1தொகுதியில் மதிமுக வெற்றிபெறுமா? தேர்தலுக்கு பிந்தைய AIWA நிறுவனத்தின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்?
Loading...