இந்திய வரலாற்றில் முதல் முறையாக மேற்கு வங்கத்தில் அமலுக்கு வந்தது #324 மம்தாவின் ஆட்டத்திற்கு முடிவு.

மேற்குவங்கம்.,

மேற்கு வங்கம் மாநிலத்தில் இதுவரை சுதந்திர இந்தியாவில் இல்லாத அளவிற்கு வன்முறைகள் நடந்து வருகின்றன, காஷ்மீர் மாநிலத்தை விட அதிக அளவு கலவரங்கள், வன்முறைகள் மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரிணமூல்- பாஜக தொண்டர்கள் இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ளதால், தேர்தலுக்கு பரப்புரை செய்ய நாளை வரை நேரம் இருந்தும் இன்றோடு பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள, தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதற்கு எதிர்வினை ஆற்றிய மம்தா என்னிடம்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன, தேர்தலுக்கு பின்பு தெரியும் என்ற தொனியில் காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியிருந்தார்.

இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக அரசியல் சட்ட பிரிவு 324 அமல்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  எங்கள் தலைவரை வையாபுரி என்று அசிங்கபடுத்திவிட்டார் நிர்மலா கடும் கோபத்தில் மதிமுகவினர்

324வது சட்டப்பிரிவு என்பது சம்பந்தபட்ட மாநிலத்தின் அதிகாரத்தை தேர்தல் முடியும் வரை தேர்தல் ஆணையமே தன்வசம் வைத்துக்கொள்வது..

மாநில அரசின் காவல்துறை உயர் அதிகாரிகள் தொடங்கி தலைமைச் செயலர் மற்றும் உள்துறை செயலர் வரை யாரையும் பணியிடை நீக்கம் செய்யவோ-மாற்றம் செய்யவோ தேர்தல் ஆணையத்தால் முடியும்.
யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையாக இன்று தான் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது..

பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மம்தாவின் அதிகார திமிருக்கு தகுந்த பதிலடியினை தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது.

இதையும் படிக்க:  புதுச்சேரி தொகுதியை கைப்பற்றப்போவது யார் ?

©TNNEWS24

@செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...