பரபரப்பு ! மனைவி குறித்த விமர்சனம் இறுதியில் தனசேகருக்கு பதில் சொல்லிய சீமான் .

பரபரப்பு ! மனைவி குறித்த விமர்சனம் இறுதியில் தனசேகருக்கு பதில் சொல்லிய சீமான் .

சென்னை.,

நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று சென்னையில், இலங்கையில் குண்டுவெடிப்புசம்பவம் நடைபெற்றதை கண்டித்து கண்டன பொது கூட்டம் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய சீமான் தன்னை சமூகவலைத்தளங்களில் விமர்ச்சிப்பவர்களை கடுமையாக தாக்கி பேசினார், என்னை சொல்லும் நீங்கள் போராடாமல் எங்கு சென்றீர்கள் என்றும் திமுக தலைவருக்கு எழுதி கொடுத்ததையே படிக்க தெரியாது இவரு எங்களை குறை சொல்கிறார் என்று ஸ்டாலின் புலம்பல்களை சுட்டிக்காட்டினார் சீமான்.

இறுதியில் கடந்த சில நாட்களாக நாம் தமிழர்கட்சியில் இருந்து விலகிய தனசேகர் என்பவருக்கும் சீமானின் உதவியாளர் புகழேந்திக்கும் இடையே நடந்த ஆபாச பேச்சுக்கள் குறித்து கடுமையாக சாடி பேசினார்.

இதையும் படிக்க:  திருவள்ளுவர் அடையாளத்தை அழித்ததுபோல் ஔவையார் அடையாளத்தை அழிக்க துடிக்கும் வைரமுத்து

ஒரு நாய் பேசினால் நாம் கண்டுகொள்ளக்கூடாது, என்னையோ, என் அம்மாவையே, அல்லது என் மனைவியையோ திட்டினால் ரசிப்பேன் என்றும் கோபப்பட்டு அரசியலில் விட்டு வெளியேறமாட்டேன் என்று தனசேகரன் சீமான் குடும்பம் குறித்த தரக்குறைவான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சீமான். ஆனால் தனசேகர் முன்வைத்த சாதி அரசியலோ அல்லது பணம் விவகாரம் குறித்து சீமான் எந்த பதிலும் அளிக்கவில்லை.

சீமானின் பேச்சுக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வளம் வந்தபடியுள்ளன.

©TNNEWS24


செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...